சற்று முன்



வணக்கம் பண்ணையார்* திரைப்படத்தின் *இசை வெளியீட்டு விழா !


SAIAK Media Production வழங்கும் *வணக்கம் பண்ணையார்* திரைப்படத்தின் *இசை வெளியீட்டு விழா* அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது.


 திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த திரைப்படம் *சித்தார்த் அபிமன்யு* தயாரிப்பில் உருவாகியுள்ளது. 


 *திரு.கரு துரைராஜன்* இயக்கி இசையும் அமைத்துள்ளார். 

 தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை *ராஜசேகர் நாயுடு* கவனித்துள்ளார்.

*படத்தொகுப்பை*

*கார்த்தி பாண்டியன்* செய்துள்ளார்,


*கலை இயக்கத்தை அர்ச்சனா கண்ணன்* மேற்கொண்டுள்ளதுடன்,

 *பின்னணி இசையை விஜய் பிரபு* வழங்கியுள்ளார்.


இப்படத்தின் மூலம் *மகிழன் பரிதி*, *மதுமிதா* ஆகியோர் பின்னணி பாடகர்களாக அறிமுகமாகின்றனர்.


*வணக்கம் பண்ணையார்* திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் *காதல் சுகுமார், கிரேன் மனோகர், ரஞ்சன், அஸ்வினி* உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் *நகைச்சுவை மன்னன் *நாகேஷ்* அவர்களின் மகனும், பிரபல நடிகருமான *ஆனந்த் பாபு* கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் *ஆர்.கே. அன்புச்செல்வன்*,

நம் மண்ணின் மக்கள் கட்சித் தலைவர் *ஆரிப் அலி*, 

தமிழ் ஃபிலிம் ப்ரொட்யூசர் கவுன்சில் லைஃப் மெம்பர் *டாக்டர் கே. கருணாகரன்* ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை