சற்று முன்



அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது - கமல்ஹாசன் !


அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது - கமல்ஹாசன் ! 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருமித்த முடிவு.

நாங்கள் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை எனவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், மதவாத சூழ்ச்சியில் இருந்து விழிப்புணர்வு பெறவும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. 

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். என்னைப் புரிந்துகொண்டு சுயநலமின்றி என்னோடு பயணிக்கும் எனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை