வெஞ்சென்ஸ் திரை விமர்சனம் ! Review
சிறு வயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் தொடர்ந்து பேச வேண்டும் என்ற ஆசையுடன் வாழும் அபர்ணதி, அதற்காக பள்ளிப் பருவத்திலேயே மாநில அளவில் முதல் மாணவியாக சாதனை படைக்கிறார். ஆனால் அந்த புகழ் சில நாட்களில் மறைந்து போக, தன்னைப் பற்றிய கவனம் எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுக்கிறார். வளர்ந்து மாவட்ட ஆட்சியராகும் அபர்ணதி, தனது அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி அரசியல் அரங்கில் முன்னேறி, முதலமைச்சருக்கே சவால் விடுக்கும் நிலைக்கு செல்வது தான் ‘வெஞ்சென்ஸ்’ படத்தின் கதை.
நாயகியாக நடித்துள்ள அபர்ணதி, தைரியமும் புத்திசாலித்தனமும் நிறைந்த கதாபாத்திரத்தை நம்பகமாக கையாள்கிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. முதலமைச்சராக நடித்துள்ள இளவரசு, மத்திய அமைச்சராக ஜான் விஜய், தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தரத்தை கூட்டுகிறது. கார்த்திக் ராஜாவின் இசையும், இம்ரானின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்தை தக்கவைத்திருக்கிறது.
ஒரு பெண்ணின் பழிவாங்கும் மனநிலையும், புகழ் மீது கொண்ட ஆசையையும் மையமாக வைத்து தமிழக அரசியல் சம்பவங்களை இணைத்து இயக்குநர் ராகுல் அசோக் விறுவிறுப்பான அரசியல் கதையை சொல்ல முயன்றுள்ளார். முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சற்று மெதுவாகத் தோன்றினாலும், அரசியல் பின்னணியுடன் அமைந்த திரைக்கதை படத்தை ஈர்ப்புடன் வைத்திருக்கிறது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை