வடம் திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விமல் அவரது நடிப்பில் வடம்.
மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு உருவான கமர்ஷியல் திரைப்படம் தான் ‘வடம்’. மாடுகளை உயிராக நேசிக்கும் வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார். சிறு வயதில் காப்பாற்றிய கன்றை வளர்த்து மஞ்சுவிரட்டு காளையாக உருவாக்கும் அவர், பலரின் பகைமையையும் எதிர்கொண்டு வாழ்கிறார். காதல், பகைமை, வாழ்க்கை போராட்டம் ஆகியவற்றுடன் கதை நகர்கிறது.
விமல் தனது வழக்கமான இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தை நம்ப வைக்கிறார். நாயகி சனஷ்கா ஸ்ரீ அழகாக தோன்றினாலும், அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது ஏமாற்றம் தருகிறது. நட்டி நட்ராஜ் மற்றும் முனீஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மஞ்சுவிரட்டு களத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு நன்றாக பதிவு செய்துள்ளது. ஆனால் கதை மற்றும் திரைக்கதை சில இடங்களில் பழைய தமிழ் படங்களை நினைவுபடுத்துகிறது. இருந்தாலும், தென் மாவட்ட உணர்வுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக ‘வடம்’ அமைகிறது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை