சற்று முன்



அனோமி திரை விமர்சனம் ! Review




தடவியல் நிபுணரான பாவனா, தனது தம்பியின் மரணத்தை விசாரிக்கும் போது அது சாதாரண தற்கொலை அல்ல, தொடர்ச்சியான சைக்கோ கொலைகளுடன் தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்கிறார். மிகக் குறைந்த தடயங்களை அடிப்படையாகக் கொண்டு உண்மையை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் விசாரணை தான் ‘அனோமி’ படத்தின் மையக்கதை.

நாயகியாக நடித்துள்ள பாவனா, அமைதியானாலும் உறுதியான தடவியல் நிபுணராக தனது முதிர்ச்சியான நடிப்பால் கதையை முழுவதும் தாங்கி செல்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றும் ரஹ்மான் கதாபாத்திரம், பின்னர் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி படத்திற்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் காட்சிகளை பதற்றம் நிரம்பிய சூழலில் பதிவு செய்த விதம் சிறப்பாக உள்ளது. ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் பின்னணி இசை திரில்லர் உணர்வை அதிகரிக்க உதவுகிறது. கிரியன் தாஸ் செய்த தொகுப்பு, படத்தின் வேகத்தையும் சஸ்பென்ஸையும் நன்றாகக் காக்கிறது.

இயக்குநர் ரியாஸ் மராத், சைக்கோ திரில்லர் கதையை அறிவியல் சார்ந்த கோணத்தில் வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், கொலைக்கான காரணத்தை விளக்கும் விதமும் படத்திற்கு தனித்துவத்தை தருகின்றன.

மொத்தத்தில், ‘அனோமி’ – வித்தியாசமான கருத்தை சுவாரஸ்யமான திரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் கவனிக்கத்தக்க திரைப்படம். 

Rating : 3 /


கருத்துகள் இல்லை