சற்று முன்



காளிதாஸ் 2’ திரை விமர்சனம் ! Review



தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் பரத் அவரது நடிப்பில் ஏற்கனவே காளிதாஸ் ஒன்று வந்து வெற்றி பெற்றது அதன் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 .

 மற்றும் இப்படத்தில் அறிமுகம் ஆகும் நாயகன் அஜய் கார்த்தி , நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் சங்கீதா மற்றும் பவானி ஸ்ரீ , அபர்ணதி , ஆனந்த் நாக் , பிரகாஷ்ராஜ் , கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீ செந்தில் .

கதை ஆரம்பமே : 

குழந்தை கடத்தல் மற்றும் மர்ம மரணங்களை மையமாக கொண்டு தொடங்கும் படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், போகப் போக கதை அதிகமாக சிக்கலாகி விடுகிறது. பல சம்பவங்களை ஒன்றோடொன்று இணைக்க முயற்சித்திருப்பது சில இடங்களில் குழப்பமாக தோன்றுகிறது.

திருப்பங்கள் அதிகமாக இருந்தாலும், சிலவை முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாகவும், சில இடங்களில் லாஜிக் குறைவாகவும் தெரிகிறது. விசாரணை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக இல்லாமல் நீளமாக உணரப்படுகிறது.

பரத் மற்றும் மற்ற நடிகர்கள் நல்ல முயற்சி எடுத்திருந்தாலும், கதையின் பலவீனம் காரணமாக அவர்கள் முழு தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சராசரியாக இருந்தாலும், பெரிதாக நினைவில் நிற்கவில்லை. காளிதாஸ் ஒன்று அளவுக்கு  இல்லை காளிதாஸ் 2 ஏமாற்றம்.

மொத்தத்தில், நல்ல கருத்து இருந்தும் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் சுமாராக மட்டுமே இருக்கும் ஒரு கிரைம் திரில்லர் படம்.

Rating : 2.5 /


Marveltamilnews.com



கருத்துகள் இல்லை