ரவி வர்மாவால் ஈர்க்கப்பட்ட லித்தோகிராஃப்களை உருவாக்க அருங்காட்சியகங்களுடன் இணைந்து ஓவிய உரிமைகளை கிருஷ்ணவதாரம் குழுவினர் பெற்றுள்ளனர் !
ரவி வர்மாவால் ஈர்க்கப்பட்ட லித்தோகிராஃப்களை உருவாக்க அருங்காட்சியகங்களுடன் இணைந்து ஓவிய உரிமைகளை கிருஷ்ணவதாரம் குழுவினர் பெற்றுள்ளனர் !
சென்னை : இந்திய சினிமாவை பாரம்பரிய ஓவிய மரபுகளுடன் இணைக்கும் ஒரு முன்முயற்சியாக, கிருஷ்ணவதாரம் திரைப்படத்தின் IP உரிமையாளர்களான கிரியேட்டிவ்லேண்ட் ஸ்டுடியோஸ், ராஜா ரவி வர்மாவின் காலத்தால் அழியாத புகழ்பெற்ற ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, திரைப்படத்திலிருந்து 150 முக்கியமான காட்சிகளை வரையறுக்கப்பட்ட ஒரு லிமிடெட் எடிஷன் லித்தோகிராஃப்களாக (அச்சிடப்பட்ட ஓவியங்கள்) கலெக்ஷனாக கொண்டு வர முன்னணி அருங்காட்சியங்களுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரத்யேக லித்தோகிராஃப்களின் முதல் தொகுப்பு நேற்று டெல்லியில் நடந்த கிருஷ்ணவதாரம் சிறப்பு திரையரங்க காட்சியில் வெளியிடப்பட்டது; இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சாரம், ஆன்மீகம், இந்திய அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த மதிப்புமிக்க விருந்தினர் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணவதாரம் படத்தின் தயாரிப்பாளர் சஜன் ராஜ் குரூப் அவர்கள் கூறுகையில், "கிருஷ்ணவதாரத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல உருவாக்கப்பட்டுள்ளது; அவை ஒரு தருணமாக மட்டுமல்ல, ஒரு ரசனையை படம்பிடிக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது அந்த சிறப்பு தருணங்களை திரைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவற்றிற்கு ஒரு நிரந்தரமான கலாச்சார வடிவத்தை வழங்க வழிவகுத்துள்ளது. ராஜா ரவி வர்மா லித்தோகிராஃப்கள் மூலம் இல்லங்களில் தெய்வீகத்தைக் கொண்டு வந்ததைப் போலவே, சினிமாவையும் சேகரிக்கக்கூடிய கலெக்ஷனாக புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பாரம்பரியத்தை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.
ரவி வர்மாவின் வரலாற்று லித்தோகிராஃப்கள் மூலம் ஒரு காலத்தில் இந்திய இல்லங்களுக்கு புராணங்களைக் கொண்டு வந்த உயரிய ஓவிய மொழியைத் தொடர்ந்து, இந்த முன்முயற்சியானது கிருஷ்ணவதாரத்தின் சினிமா காட்சிகளை காலத்தால் அழியாத கலைப் படைப்புகளாக புதிய வடிவில் கற்பனை செய்து வழங்கவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் அதன் ஓவியக் கலவை, ஆழமான உணர்வு மற்றும் கலாச்சார பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது; இது தெய்வீக மஹாராஸ், கிருஷ்ணரின் விஸ்வரூப தருணங்கள் மற்றும் காவியத்தின் முக்கிய தருணங்களை உள்ளடக்கியது.
இந்த காட்சிகள் யாவும் அருங்காட்சியக தரத்திலான லித்தோகிராஃபிக் பிரிண்ட்களாக உருவாக்கப்படவுள்ளன; அவை இந்திய கலை வரலாற்றில் அதன் ஆழமான பின்புலம், நுணுக்கமான வேலைப்பாடு விவரங்கள், வண்ணங்களின் செழுமை மற்றும் பாரம்பரிய அழகியலை கண்முன்னே கொண்டுவரும் வகையில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சமகால சினிமா சூழலில் லித்தோகிராஃப் வடிவமைப்பை புதுப்பிப்பதன் மூலம், புராணங்கள், திரைப்படம் மற்றும் நுண்கலையின் அரிய சங்கமத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த தொகுப்பு குறைந்த அளவில், எண்கள் பொறிக்கப்பட்ட பதிப்புகளாக வெளியிடப்படும்; அவை ஒவ்வொன்றும் நம்பகத்தன்மைக்கான சான்றிதழுடன் வெளியிடப்படும். அவை ஓவிய வல்லுநர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக படைப்புகளை சேகரிப்பவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க கலெக்ஷனாக கருதப்படும். பிரத்யேக கேலரிகளில் காட்சிப்படுத்துவது, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலங்கள் ஆகியவற்றுக்கான பரிசீலனைகளும் நடந்து வருகின்றன; அதன் மூலம் பார்வையாளர்கள் கிருஷ்ணவதாரத்தை ஒரு உயிருள்ள கலை கண்காட்சியாக அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
இந்த சிந்தனை குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர்கள், “ராஜா ரவி வர்மா அவரது லித்தோகிராஃப்கள் மூலம் தெய்வீக ஓவியங்களை ஜனநாயகப்படுத்தினார்; கடவுள்களை அன்றாட இடங்களில் கொண்டு வந்தார். கிருஷ்ணவதாரம் மூலம், அந்த மரபை நாங்கள் மேலும் விரிவுபடுத்துகிறோம்; தத்ரூபமான சினிமா காட்சிகளை மக்கள் சொந்தமாக்கக்கூடிய, காட்சிப்படுத்தக்கூடிய, எடுத்துச் பிறருக்கு வழங்கும் வகையிலான காலத்தால் அழியாத கலைப் படைப்புகளாக மாற்றுகிறோம்,” என்று கூறினார்.
இந்த முயற்சி கிருஷ்ணவதாரத்தின் கலாச்சார தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது; இது ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், ஊடக வடிவங்களைக் கடந்து பரிணமிக்கும் ஒரு ஓவிய புரட்சியாக நிலைத்து நிற்கும். இன்றைய காலகட்டத்தில் புராணங்கள் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை மறுவரையறை செய்கிறது.










கருத்துகள் இல்லை