சற்று முன்



பூட்டான் அரசும் உலக வங்கியும் டோர்ஜிலுங் நீர்மின் திட்டத்திற்கான நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன!


பூட்டான் அரசும் உலக வங்கியும் டோர்ஜிலுங் நீர்மின் திட்டத்திற்கான நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன !

சென்னை, — பூட்டான் அரசும் உலக வங்கியும் 1,125 மெகாவாட் (MW) திறன் கொண்ட டோர்ஜிலுங் நீர்மின் திட்டத்திற்காக (Dorjilung Hydroelectric Power Project) மொத்தம் 515 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தத் திட்டம் பூட்டான் நாட்டின் மொத்த எரிசக்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது மலிவான மின்சார பயன்பாடு மற்றும் தூய்மையான எரிசக்தி ஏற்றுமதி மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

"பூட்டானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் டோர்ஜிலுங் நீர்மின் திட்டம், பொது-தனியார் கூட்டு செயல்பாட்டின் (public-private partnership -PPP) கீழ் உருவாக்கப்படும் இந்நாட்டின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும். நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் இந்த முதலீடு தூய்மையான எரிசக்தியை வழங்குவதோடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, எங்களது கார்பன் உமிழ்விற்கு எதிரான 'கார்பன்-நெகட்டிவ்' (carbon-negative) உறுதிப்பாட்டை மேம்படுத்தும். இந்தத் திட்டம் உலக வங்கி குழுமத்துடனான எங்களது வலுவான உறவிற்கும், பூட்டான் மக்களின் வளமான எதிர்காலத்திற்கும் நாங்கள் கொண்டிருக்கும் பொதுவான தொலைநோக்குப் பார்வைக்கு இதுவொரு மிகச்சிறந்த சான்றாகும்." என்றார் பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, [Dasho Tshering Tobgay, Prime Minister of Bhutan]

கிழக்கு பூட்டானில் உள்ள குரிச்சு (Kurichhu) ஆற்றின் குறுக்கே அமையவுள்ள இந்தத் திட்டம், ஆண்டுதோறும் 4,500 GWh-க்கும் அதிகமான தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இது குளிர்காலத்தில் பூட்டானில் நிலவும் பருவகால மின் தட்டுப்பாட்டைப் போக்குவதுடன், கோடை மற்றும் மழைக்காலங்களில் உபரி மின்சாரத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும்.

திட்டத்தின் முக்கியப் பயன்கள்:

• பொருளாதார வளர்ச்சி:

இந்த நீர்மின் நிலையம் பூட்டானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 2.4% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• வேலைவாய்ப்பு:

இது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பூட்டானில் தொழில் முனைவோர் வாய்ப்புகளையும் பெருக்கும். இதன் மூலம் பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சியை முன்னெடுக்க உதவும்.

• உள்கட்டமைப்பு மேம்பாடு:

நம்பகமான மற்றும் மலிவான மின்சாரத்தை வழங்குவதன் மூலம் உற்பத்தி, சுற்றுலா மற்றும் சிறு வணிகங்களையும் ஊக்குவிக்கும். ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் மறுமுதலீடு செய்யப்படும்.

• சுற்றுச்சூழல் தாக்கம்:

ஆண்டுதோறும் 3.3 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தைத் (CO2) தவிர்ப்பதன் மூலம், தூய்மையான ஆற்றல் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலமும் பிராந்திய அளவில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

"டோர்ஜிலுங் திட்டம் பூட்டான் மற்றும் உலக வங்கி குழுமத்திற்கு ஒரு தனித்துவமான முயற்சியாகும். பொது மற்றும் தனியார் மூலதனத்தை ஒன்றிணைக்கும் இந்த புதுமையான நிதி மாதிரி, நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒரு புதிய தரநிலையை அமைக்கிறது. "பூட்டான் மற்றும் தெற்காசியாவிற்கும் பயனளிக்கும் வகையில் ஒரு விரிவான திட்டமாகும். இதன் மூலம், பூட்டான் தனது செலவு மிகுந்த எரிசக்தி இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்ட இது உதவும். அதே நேரத்தில், தெற்காசியா கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, தனது எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தும்." என்றார் தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜட் [Johannes Zutt, World Bank Vice President for the South Asia Region]

பூட்டானின் நிதியமைச்சர் மேதகு லியோன்போ லேகி டோர்ஜி [H.E. Lyonpo Lekey Dorji, Finance Minister of Bhutan] கூறுகையில், " டோர்ஜிலுங் நீர்மின்சக்தி திட்டம் ஒரு தேசிய முன்னுரிமையாக அமைந்திருக்கிறது, மேலும் இது பூட்டானுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், தூய்மையான மின்சாரத்தை வழங்குதல், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல் மற்றும் எங்களது 'கார்பன்-நெகட்டிவ்' (carbon-negative) உறுதிப்பாட்டை மேம்படுத்துதல் எனப் பல நன்மைகளை இது அளிக்கும். இதன் புதுமையான நிதி கட்டமைப்பு, இந்தத் திட்டம் பொது நிதிக்குத் தேவையற்ற சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களது மக்கள் நலத் திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும்." என்றார்.

இந்தத் திட்டம் பூட்டானின் எரிசக்தி துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த நிதி மாதிரியை நீர்மின் துறை முழுவதும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது" என்று ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் (Druk Green Power Corporation) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாஷோ சேவாங் ரின்சின் [Dasho Chhewang Rinzin, Managing Director of the Druk Green Power Corporation.] தெரிவித்தார். "இது மின் கட்டமைப்பிற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை (grid flexibility) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பருவகால மின் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதோடு ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்க முடியும். இத்திட்டத்தின் கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பின்பற்றுவதிலும், பூட்டானின் 'கார்பன்-நெகட்டிவ்' நாடு என்ற நற்பெயரைத் தக்கவைப்பதிலும் நாங்கள் மிகுந்த உறுதியுடன் இருக்கிறோம்."

இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலக வங்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு, சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 300 மில்லியன் டாலர் சலுகை நிதியை (இதில் 150 மில்லியன் டாலர் மானியம்) வழங்க ஒப்புதல் [approved] அளித்தது; மேலும் சர்வதேச புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியிடமிருந்து (International Bank for Reconstruction and Development (IBRD);) 215 மில்லியன் டாலர் நிதியும், சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து (International Finance Corporation (IFC)) 300 மில்லியன் டாலர் வரை நிதியும் டோர்ஜிலுங் ஹைட்ரோ பவர் லிமிடெட் (Dorjilung Hydro Power Limited (DHPL)) நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் பூட்டானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் (60 சதவீதம்) மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமான (India’s largest private integrated power company) டாடா பவர் (40 சதவீதம்) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும் (Special Purpose Vehicle). இந்தத் திட்டம் இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, பிராந்திய எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.

டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரவீர் சின்ஹா [Dr Praveer Sinha, CEO&MD Tata Power] கூறுகையில், “1,125 மெகாவாட் டோர்ஜிலுங் திட்டத்தை முன்னெடுப்பதில் தங்களது பங்களிப்பை வழங்கிய பூட்டான் அரசு, உலக வங்கி குழுமம் மற்றும் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் ஆகியோருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 515 மில்லியன் டாலர் நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பது, பூட்டானின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைப் பங்களிக்கப்போகும் இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் இந்தியா-பூட்டான் இடையேயான தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இதன் ஆண்டு உற்பத்தியான 4,500 GWh-ல் கிட்டத்தட்ட 80% இந்தியாவிற்கு வழங்கப்படுவதால், குறிப்பாகக் கோடையில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இது உதவும்; அதே நேரத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட பொருளாதார நலனுக்காக பூட்டான் தனது தூய்மையான எரிசக்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தவும் இது வழிவகை செய்யும்.” என்றார்.

சுமார் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் திட்டம், அரசாங்கத்தின் நேரடி கடன் வாங்கும் தேவையைக் குறைக்கும் வகையில் ஒரு புதுமையான பொது-தனியார் கூட்டு முயற்சியாக (public-private partnership) கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது தனியார் துறையிலிருந்து கூடுதலாக 900 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தனித்துவமான நிதி அமைப்பின் மூலம், பூட்டான் வெறும் 150 மில்லியன் டாலர் நேரடி கடன் பொறுப்புடன் 1.7 பில்லியன் டாலர் திட்டச் செலவை ஈடுகட்ட முடிகிறது. மேலும் 30 ஆண்டுகால IDA கடன் காலத்தில் வரி, இலவச மின்சாரம் மற்றும் பங்கு ஈவுத்தொகை மூலம் ஒட்டுமொத்தமாக சுமார் 4 பில்லியன் டாலர் வருவாயைப் பெற முடியும்.

பூட்டான் அரசின் நிதிச் செயலாளர் தாஷோ லேகி வாங்மோ [Dasho Leki Wangmo, Finance Secretary, Royal Government of Bhutan] மற்றும் வங்கதேசம் மற்றும் பூட்டானுக்கான உலக வங்கிப் பிரிவு இயக்குநர் ஜீன் பெஸ்மே [Jean Pesme, World Bank Division Director for Bangladesh and Bhutan] ஆகியோர் முறையே பூட்டான் மற்றும் உலக வங்கியின் சார்பாக 300 மில்லியன் டாலர் IDA நிதி மற்றும் 215 மில்லியன் டாலர் IBRD நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

"உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், டோர்ஜிலுங் நீர்மின் திட்டம் தூய்மையான, நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட எரிசக்தி பாதுகாப்பைக் கட்டமைப்பதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது" என்று பூட்டானுக்கான உலக வங்கி குழுமத்தின் நாட்டின் மேலாளர் சேவியர் ஃபர்டாடோ [Xavier Furtado, the World Bank Group’s Country Manager for Bhutan.] கூறினார். "பூட்டானின் கடன் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இவ்வளவு பெரிய அளவிலான ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான புதுமையான நிதித் தொகுப்பை வழங்க உலக வங்கி குழுமம் IDA, IBRD மற்றும் IFC ஆகியவற்றை ஒன்றிணைத்துள்ளது." என்று மேலும் அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை