கட்டா குஸ்தி 2 திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால் அவரது நடிப்பில் ஏற்கனவே வெளியான கட்டா குஸ்தியின் இரண்டாம் பாகமாக கட்டா குஸ்தி 2 மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி , கருணாஸ் , லெசி ஆண்டனி , காயத்ரி , முனீஸ்க்காந்த் , காளி வெங்கட் , சிறப்பு தோற்றம் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் செல்ல அய்யாவு.
கதை ஆரம்பமே :
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், கணவன்–மனைவி புரிதல், பெண்களின் கனவுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களை நகைச்சுவையுடன் கலந்த உணர்வுபூர்வமான கதையாக சொல்லுகிறது.
மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக வீட்டுப் பொறுப்புகளையும் குழந்தை பராமரிப்பையும் ஏற்றுக்கொள்ளும் கணவராக விஷ்ணு விஷால் மனம் கவர்கிறார். அதே நேரத்தில், குடும்பத்தில் உருவாகும் சிறிய கருத்து வேறுபாடுகள் எவ்வாறு பெரிய பிரச்சினையாக மாறுகின்றன என்பதையும் படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.
விஷ்ணு விஷால், மனைவிக்கு துணையாக நிற்கும் சிறந்த கணவராகவும், தேவையான இடங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி வீராங்கனையாகவும், குடும்பப் பெண்ணாகவும் கதையின் மையமாக வலுவான நடிப்பை வெளிப்படுத்துகிறார். குழந்தை நட்சத்திரம் சாராவின் இயல்பான நடிப்பும், கருணாஸின் நகைச்சுவையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. டீச்சர் கதாபாத்திரத்தில் மோக்ஷாவும் தனது பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளார்.
இயக்குநர் செல்லா அய்யாவு, முதல் பாகத்தின் நகைச்சுவையை தக்க வைத்துக் கொண்டதோடு, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில், 'கட்டா குஸ்தி 2' சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம்.
Rating : 4 / 5









கருத்துகள் இல்லை