சற்று முன்



'ஐ, நோபடி திரை விமர்சனம் !



வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டிருந்தாலும், கொள்ளையர்களை விட அந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தையே மையமாக வைத்து விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ளது 'ஐ, நோபடி'.

வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரன், கொள்ளையர்களால் பிணைக் கைதியாக அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் அவர்கள் விபத்தில் உயிரிழந்தாலும், அவரிடம் கிடைக்கும் ஒரு ஆதாரமும், அவர் ஏன் அந்த வங்கியில் இருந்தார் என்ற சந்தேகமும் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றன. அந்த சந்தேகங்கள், ஊடக பரபரப்பு, குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைச் சுற்றிய மர்மம் ஆகியவற்றை திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிசாம் பஷீர்.

பிரித்விராஜ் சுகுமாரன் வழக்கம்போல அளவான நடிப்பில் கதையை முழுவதுமாக தாங்கிச் செல்கிறார். பார்வதி திருவோத்தும் தனது கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஹக்கிம் ஷாஜகான் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, ரமீஸ் எம்.பி.யின் வேகமான படத்தொகுப்பு மற்றும் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஆகியவை படத்தின் பதற்றத்தை இறுதி வரை குறையாமல் தக்க வைத்திருக்கின்றன.

சில இடங்களில் இரண்டாம் பாதி ஆக்‌ஷன் காட்சிகள் சற்று நீளமாக இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை அந்த குறையை மறக்கச் செய்கிறது.

மொத்தத்தில், 'ஐ, நோபடி' என்பது வழக்கமான கொள்ளை படம் அல்ல; தொடக்கம் முதல் முடிவு வரை பதற்றத்தையும் சுவாரஸ்யத்தையும் குறைக்காமல் நகரும் தரமான திரில்லர்.

Rating : 3 / 5 


கருத்துகள் இல்லை