சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விற்பனை நிலையத்தை 'இளைய திலகம்' பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் திறந்து வைத்தனர்!
சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விற்பனை நிலையத்தை 'இளைய திலகம்' பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் திறந்து வைத்தனர்!
சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள இந்த அதிநவீன அம்சங்களுடனான புதிய விற்பனை நிலையம், வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.
சென்னை, 12 ஜூலை 2026: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் (Kalyan Jewellers), தமிழ்நாட்டின் சென்னை அசோக் நகர், அண்ணா மெயின் ரோடு (அசோக் பில்லர் ரோடு) (Ashok Pillar Road, Anna Main Road, Ashok Nagar, Chennai, Tamil Nadu) பகுதியில் அமைந்துள்ள தனது புத்தம் புதிய விற்பனை நிலையத்தை இன்று தொடங்கியுள்ளது. இத்தப்பகுதியில் பிராண்டின் விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய விற்பனை நிலையத்தைத் திரைப்பட நட்சத்திரங்களான திரு. பிரபு கணேசன் மற்றும் செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தனர். இந்த விற்பனை நிலையத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புகழ்பெற்ற பிராண்டுகளான முகூர்த் (Muhurat - திருமண நகை வரிசை), முத்ரா (Mudhra - பாரம்பரிய கைவினை நகைகள்), நிமா (Nimah - கோவில் நகைகள்) உள்ளிட்ட எண்ணற்ற பிரத்தியேக ஆபரண வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன், கல்யாண் ஜூவல்லர்ஸின் பல்வேறு தனித்துவமான நகை வரிசைகளின் ஏராளமான ஆபரணத் தொகுப்புகளைக் கொண்டுள்ள இந்த புதிய விற்பனை நிலையம், இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரத்திலான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்.
இந்நிகழ்வில் ஏராளமாக கலந்து கொண்ட மக்கள் மத்தியில் திரு. பிரபு கணேசன் பேசுகையில், "கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய விற்பனை நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்பதில் நாங்கள் உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கே மூன்னுரிமை என்ற கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஒரு புகழ்பெற்ற பிராண்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்," என்றார்.
அவரைத் தொடர்ந்து நடிகை செல்வி. மாளவிகா மோகனன் பேசுகையில், "இந்த சென்னை மாநகர மக்கள் கல்யாண் ஜூவல்லர்ஸின் ஈடுஇணையற்ற சேவைத் தரத்தையும், அதன் நேர்த்தியான நகை வடிவமைப்புகளையும் பாராட்டுவதோடு, தங்களின் ஆதரவையும் அன்பையும் இந்த புதிய விற்பனை நிலையத்திற்கு எப்போதும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.
சென்னை அசோக் நகரில் அமைந்திருக்கும் இந்த விற்பனை நிலையத்தின் தொடக்கம் குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் கல்யாணராமன் (Mr Ramesh Kalyanaraman, Executive Director, Kalyan Jewellers) பேசுகையில், "சென்னையில் எங்களது புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தின் மூலம், எங்களது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு முழுமையான ஷாப்பிங் தளத்தை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு நகைகள் வாங்கும் அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவமாக இருப்பதை இந்த புதிய விற்பனை நிலையம் உறுதி செய்யும். நாங்கள் வாடிக்கையாளர்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளித்துவ் வருகிறோம். அதேபோல், கல்யாண் ஜூவல்லர்ஸின் காலத்தால் அழியாத கொள்கைகளான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம்" என்றார்.
இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த விற்பனை நிலையத்தில் பல பிரத்தியேகச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நகைகளின் செய்கூலி/சேதாரத்தின் மீது 30% அதிரடித் தள்ளுபடி* (30% off on Value addition*) வழங்கப்படுகிறது. அத்தோடு, சந்தையிலேயே மிகக் குறைந்ததும், அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியானதுமான கல்யாண் நிறுவனத்தின் 'சிறப்பு தங்கப் பலகை விலை' (Special Gold Board Rate) பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம். இந்தத் தொடக்கக் காலச் சலுகைகள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸின் ஒவ்வொரு நகையும் பிஐஎஸ் (BIS) ஹால்மார்க் முத்திரை பெற்றதுடன், பலகட்ட தூய்மைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கான உத்தரவாதம், வாழ்நாள் முழுவதற்குமான இலவசப் பராமரிப்பு, துல்லியமான தயாரிப்பு விபரங்கள் மற்றும் வெளிப்படையான எக்ஸ்சேஞ்ச் & பை-பேக் (Buy-back) கொள்கைகளை உறுதி செய்யும் நிறுவனத்தின் பிரத்தியேக '4-அடுக்கு உத்தரவாதச் சான்றிதழ்' (4-Level Assurance Certificate) வழங்கப்படும். இந்த அசைக்க முடியாத உத்தரவாதம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய விற்பனை நிலையத்தில் கல்யாண் நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்டுகளான முகூர்த் (Muhurat - திருமண நகை வரிசை), முத்ரா (Mudhra - பாரம்பரிய கைவினை நகைகள்), நிமா (Nimah - கோவில் நகைகள்), க்ளோ (Glo - அசைந்து ஒளிரும் வைரங்கள்), ஜியா (Ziah - சாலிடேர் போன்ற வைர நகைகள்), அனோகி (Anokhi - வெட்டப்படாத அன்-கட் வைரங்கள்), அபூர்வா (Apoorva - விசேஷக் கொண்டாட்டங்களுக்கான வைரங்கள்), அந்தரா (Antara - திருமண வைர நகைகள்), ஹீரா (Hera - அன்றாட பயன்பாட்டு வைர நகைகள்), ரங் (Rang - நவரத்தின நகைகள்) மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லிலா (Lila - வண்ணக் கற்கள் மற்றும் வைர நகைகள்) ஆகிய அனைத்து நகைத் தொகுப்புகளும் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழ்வதற்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது. (T&C Apply*)
கூடுதல் தகவல்களுக்கு இணையத்தில் பார்க்க https://www.kalyanjewellers.net/









கருத்துகள் இல்லை