சற்று முன்



விஸ்வநாத் & சன்ஸ் திரை விமர்சனம் !

 


‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் குடும்ப உறவுகள், பெற்றோர் பாசம், திருமணம் மீதான பார்வை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள எளிமையான குடும்பப் படம்.

சஞ்சு விஸ்வநாத் கதாபாத்திரத்தில் சூர்யா ஸ்டைலாகவும், உணர்வுபூர்வமாகவும் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதைத் தொடுகிறது. மமிதா பைஜு துள்ளலான நடிப்புடன் காதல், சோகம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். ராதிகாவின் அனுபவமான நடிப்பும் படத்திற்கு பலம்.

நிமிஷ் ரவியின் பிரமாண்ட ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இனிமையான இசை, நவீன் நூலியின் நேர்த்தியான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.

திருமணத்தை விரும்பாத நாயகனின் மனநிலையையும், அவரது கடந்தகாலத்தையும் இயக்குநர் வெங்கி அட்லூரி சுவாரஸ்யமாகக் கையாண்டுள்ளார். சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் மேலோட்டமாக அணுகப்பட்டாலும், “சண்டையால் உறவுகள் பிரிவதில்லை; அதன் பிறகு எப்படி பேசுவது என்று தெரியாமல் தான் பிரிகிறது” போன்ற கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.

மெதுவான திரைக்கதை என்றாலும், குடும்ப உணர்வுகள், நல்ல நடிப்பு மற்றும் கருத்துச் சொல்லும் விதத்தால் கவனம் ஈர்க்கும் ஒரு மென்மையான குடும்பப் படம்.

Rating : 2.5 /




கருத்துகள் இல்லை