சற்று முன்



அமரம் திரை விமர்சனம் !



கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விவசாயம் பொய்த்துப் போனதால் வறுமையில் தவிக்கும் மக்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அமரம்’.

கிராம மக்களின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளும் சில பெரிய மனிதர்கள், அவர்களை குறைந்த கூலிக்கு செம்மரம் வெட்டுவது, கொலை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதில் கூலிப்படையாக செயல்படும் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), ஐரா அகர்வாலின் தந்தையை அவரது கண் முன்னே கொலை செய்கிறார். இதனால் பழிவாங்கத் துடிக்கும் ஐரா, அருகனைத் தேடிச் செல்கிறார். ஆனால் அவரை சந்தித்த பிறகு மனம் மாற, இருவருக்கும் எதிராக ஆபத்து உருவாகிறது. அந்த ஆபத்திலிருந்து ஐராவையும், தனது மக்களையும் அருகன் காப்பாற்றினாரா என்பதே கதை.

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வறுமையையும் கதையுடன் இணைத்திருப்பது படத்தின் முக்கிய பலம். சமூகப் பிரச்சினையை மட்டும் பேசாமல் காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட் மற்றும் திரில்லர் அம்சங்களையும் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா அளவாக கையாண்டிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், அதிக வசனங்கள் இல்லாமல் தனது பார்வை மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஐரா அகர்வால், பழிவாங்கும் பெண்ணாகவும், பின்னர் மனதளவில் தடுமாறும் கதாபாத்திரமாகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

பரத் குமாரின் ஒளிப்பதிவு கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் வறட்சியையும் மக்களின் வாழ்க்கையையும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. மிக்கி ஜெ. மேயரின் பின்னணி இசையும், ஆர். ஸ்ரீராமரின் படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.

மொத்தத்தில், அதிகம் சொல்லப்படாத ஒரு சமூகத்தின் வாழ்வியலை ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் சுவாரஸ்யமாகக் கூறியிருக்கும் ‘அமரம்’, ஒரு நல்ல முயற்சி.

Rating : 3 /




கருத்துகள் இல்லை