சற்று முன்



இந்துஸ்தான் பல்கலைக்கழகம் 'ஃபவுண்டர் சான்சலர் டிராபி 2026' நடத்தியது !


இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) கல்லூரியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் துறை, தனது படூர் வளாகத்தில் 'ஃபவுண்டர் சான்சலர் டிராபி 2026' விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான கால்பந்து மற்றும் ஆண்கள், பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் இடம்பெற்றன.


இந்தத் தொடரில் 15 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 460 மாணவ-விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் 252 ஆண்கள் கால்பந்து வீரர்களும், 135 ஆண்கள் வாலிபால் வீரர்களும், 72 பெண்கள் வாலிபால் வீராங்கனைகளும் அடங்குவர். 2019-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த 'ஃபவுண்டர் சான்சலர் டிராபி', நிறுவனர் வேந்தர் டாக்டர் எலிசபெத் வர்கீஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை கௌரவிக்கும் வகையிலும், விளையாட்டுத் திறன், இளைஞர் வளர்ச்சி, கூட்டுப்பணி மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை, துணைவேந்தர் Dr.விகாஸ் மிஸ்ரா மற்றும் பதிவாளர் Dr.எஸ்.எஸ். ராவ் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

நிறைவு விழா:

இப்போட்டித் தொடர் செப்டம்பர் 23 மாலை நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. முன்னாள் சர்வதேச வாலிபால் வீரரும், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவருமான திரு. ஏ. சிவராமன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும், துபாயில் உள்ள 'Aspin Holdings LLC (Aspin Sports)' நிறுவனத்தின் சர்வதேச உத்திசார் கூட்டாண்மைத் தலைவருமான திரு. கணேஷ் பிரபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சாம்பியன்ஷிப் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வெற்றி பெற்ற அணிகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் (Pro-Chancellor) Dr. அசோக் ஜார்ஜ் வர்கீஸ், விளையாட்டின் பரந்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்:

"இன்றைய கடுமையாகப் போட்டியிடும் உலகில், மாணவர்கள் தங்களின் கல்லூரிப் பருவத்தில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் அனுபவிப்பது மிக அவசியமாகும். சிறந்த விளையாட்டுத் திறன், மரியாதை, நியாயம், கட்டுப்பாடு மற்றும் நேர்மை போன்ற அடிப்படை மதிப்புகளை விதைக்கிறது. நடுவரின் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வது, குழுப்பணியை வளர்ப்பது, வெற்றிகளை அடக்கத்துடன் கொண்டாடுவது மற்றும் தோல்விகளை கண்ணியத்துடன் கையாள்வது ஆகியவற்றை விளையாட்டுச் உணர்வு மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது. ஃபவுண்டர் சேன்சலர் டிராஃபி (Founder Chancellor Trophy) மாணவர்களை ஒன்றிணைப்பதையும், சக மாணவர்கள், பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இடையே நேர்மறை நடத்தை முறைகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.”



போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:

ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஸ் - எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி (SRM IST), சென்னை

ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஸ் - எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி (SRM IST), சென்னை

பெண்கள் வாலிபால் சாம்பியன்ஸ் – வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University)

இரண்டாம் இடம் (Runners-Up) & பிற இடங்கள்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (TNPESU), விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (சென்னை வளாகம்), மற்றும் தொடரை நடத்திய இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிகள்.



கருத்துகள் இல்லை