சற்று முன்



கோல்ட் கால் – திரைவிமர்சனம்



பெங்களூருவில் வேலை தேடி அலையும் 4 இளைஞர்கள், ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்களாக வேலைக்கு சேருகிறார்கள்.


 வேலை செய்வதைவிட, கொடுக்கப்பட்ட இலக்கை எப்படியாவது சமாளித்து நாட்களை கடத்த வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் தலைகீழாக மாறுகிறது.

ஒரு பிரபல நிறுவனத்தின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்படுகிறான்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கும் 4 இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சூழ்நிலை உருவாகிறது.


 இதனால் போலீஸ் விசாரணை ஒருபுறம், வேலையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடி மறுபுறம் என அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த பிரச்சினையில் இருந்து 4 பேரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் முக்கிய கதை.

இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், நகைச்சுவையையும் த்ரில்லரையும் கலந்து கதையை நகர்த்தியிருக்கிறார். கடந்த காலம் மற்றும் நிகழ்கால சம்பவங்களை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், ஆரம்பத்தில் சாதாரணமாக தெரியும் காட்சிகள் பின்னர் கதையின் முக்கிய முடிச்சுகளுடன் தொடர்புபடுகின்றன. இதனால் படம் செல்ல செல்ல ஆர்வம் அதிகரிக்கிறது.

சித்து மூலமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களை இயல்பாக கையாண்டுள்ளனர். குறிப்பாக, எந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் 4 இளைஞர்களும் குழம்பும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோரும் கதையின் நகர்வுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று பெங்களூரு நகரத்தை கதையின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பது. சாலைகள், அலுவலகங்கள், இரவு நேரக் காட்சிகள் என நகரத்தின் இயல்பான சூழலை சரவணனின் ஒளிப்பதிவு அழகாக பதிவு செய்துள்ளது.

பிரணவ் கிரிதரனின் இசை, நகைச்சுவைக் காட்சிகளில் இலகுவான உணர்வையும், பரபரப்பான காட்சிகளில் பதற்றத்தையும் உருவாக்குகிறது.

 சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு, மாறுபட்ட காலகட்டங்களில் செல்லும் காட்சிகளை சீராக இணைத்துள்ளது. சண்டைக் காட்சிகளும் படத்தின் த்ரில்லர் தன்மைக்கு வலு சேர்க்கின்றன.

கதையின் சில திருப்பங்களை முன்கூட்டியே யூகிக்க முடிவது சிறிய குறையாக இருந்தாலும், அதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் விதம் படத்தை ரசிக்க வைக்கிறது.

 குறிப்பாக, எந்தத் திட்டமும் இல்லாமல் ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும் 4 இளைஞர்களின் குழப்பங்களே படத்தின் முக்கிய பொழுதுபோக்கு.

மொத்தத்தில், தீவிரமான த்ரில்லர் என்பதைவிட நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கடத்தல் சம்பவத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் ‘கோல்ட் கால்’, 

Rating : 4 /


கருத்துகள் இல்லை