சற்று முன்



இம்மார்டல் திரை விமர்சனம் !



வாடகைக்கு வீடு தேடும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, கயாடு லோஹர் தனது வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விடுவதாகக் கூறி அழைக்கிறார். அழகான வீடும், கயாடு லோஹரின் கவர்ச்சியும் அவரை கவர்ந்ததால், அதிகம் யோசிக்காமல் அந்த வீட்டில் குடியேறுகிறார். ஆனால் சில நாட்களிலேயே அந்த வீட்டில் இருக்கும் மர்மங்களும், அங்கு நடமாடும் கயாடு லோஹரின் தாத்தா போன்ற கதாபாத்திரமும் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

அந்த வீட்டில் என்ன மர்மம் இருக்கிறது, அதிலிருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா என்பதுதான் ‘இம்மார்டல்’ படத்தின் கதை.

ஃபேண்டஸி, சஸ்பென்ஸ், திரில்லர் என வித்தியாசமான கதைக்களத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் வீட்டின் மர்மம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கி படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் வெளிப்பட்ட பிறகு திரைக்கதையின் வேகம் மற்றும் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார் வழக்கமான ஒரே மாதிரியான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பது பலவீனம். அதே நேரத்தில், கயாடு லோஹரின் அழகும் கவர்ச்சியும் படத்திற்கு முக்கிய பலமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. டி.எம்.கார்த்திக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக கயாடு லோஹரை அழகாகக் காட்டியிருப்பதுடன், கிராபிக்ஸ் காட்சிகளையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். சாம்.சி.எஸ்-ன் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிய முயற்சி செய்திருக்கும் இயக்குநரை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையில் இருக்கும் லாஜிக் மீறல்கள் மற்றும் பலவீனமான இரண்டாம் பாதை காரணமாக ‘இம்மார்டல்’ முழுமையான திருப்தியை தரவில்லை.

மொத்தத்தில்: வித்தியாசமான முயற்சி, சுவாரஸ்யமான முதல் பாதி; ஆனால் லாஜிக் ஓட்டைகளால் தடுமாறும் இரண்டாம் பாதி.

Rating : 3 /



கருத்துகள் இல்லை