சற்று முன்



லெனின் பாண்டியன் திரை விமர்சனம் !



மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் விவசாயி கங்கை அமரனுக்கும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர் தர்ஷன் கணேசனுக்கும் இடையிலான பயணமே ‘லெனின் பாண்டியன்’.

மணல் கொள்ளை கும்பலை சட்டத்தின் முன் நிறுத்த கங்கை அமரன் நடத்தும் போராட்டமும், அவரை காப்பாற்ற தர்ஷன் மேற்கொள்ளும் முயற்சிகளும் படத்திற்கு விறுவிறுப்பை கொடுக்கின்றன.

கங்கை அமரன் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தர்ஷன் கணேசன் காவலர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ரோஜா, போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றன. முதல் பாதி விறுவிறுப்பாக நகரும் நிலையில், இரண்டாம் பாதியில் வேகம் குறைகிறது.

சமூக பிரச்சினையை மையமாக வைத்து எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’ – கவனிக்க வைக்கும் படைப்பு.

Rating : 3/ 5 



கருத்துகள் இல்லை