சற்று முன்



சண்டக்காரி – திரைவிமர்சனம்‌!



லண்டனில் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா, குடியுரிமை பெறுவதற்காக விமலை திருமணம் செய்துகொண்டது போல் நடிக்க திட்டமிடுகிறார். ஆனால், ஸ்ரேயாவின் பதவி உயர்வை தடுக்க விமலும் ஒரு ரகசிய திட்டத்துடன் இந்த திருமண நாடகத்திற்கு சம்மதிக்கிறார். இருவரும் தமிழகத்திற்கு வந்த பிறகு நடக்கும் சம்பவங்களே ‘சண்டக்காரி’ படத்தின் கதை.

விமல் வழக்கமான தனது இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஸ்ரேயா கோபமும், திமிரும் கொண்ட கதாபாத்திரத்தில் ஓரளவு பொருந்துகிறார். பிரபு, உமா பத்மநாபன், புன்னகை பூ கீதா, சத்யன் உள்ளிட்டோர் தங்களது அனுபவமான நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.

லண்டன் மற்றும் தமிழக கிராமத்தின் அழகை ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அம்ரிஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வு என கமர்ஷியல் அம்சங்களை கலந்து இயக்கியிருக்கிறார் ஆர்.மாதேஷ். ஆனால், விமல்–ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரி எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. திரைக்கதையிலும் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது படத்தின் பலவீனம்.

சில லாஜிக் குறைகளை கடந்து பார்த்தால், காதல் மற்றும் நகைச்சுவையை விரும்புபவர்களுக்கு ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக ‘சண்டக்காரி’ உள்ளது.

Rating : 3 /


கருத்துகள் இல்லை