சற்று முன்



ஜெயிலர் 2 திரை விமர்சனம் !




சிலை கடத்தல் கும்பலின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் அழிக்க ரஜினிகாந்த் களமிறங்குகிறார். அதே நேரத்தில், வர்மாவின் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க எஸ்.ஜே.சூர்யாவும் தனது தேடலைத் தொடங்குகிறார். இருவரது பயணமும் அதிரடி, நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள் என விறுவிறுப்பாக நகர்கிறது.

அமைதியான நடிப்பு, ஸ்டைலான தோற்றம், மாஸ் காட்சிகள் என ரஜினிகாந்த் ரசிகர்களைக் கவர்கிறார். சுராஜ் வெஞ்சரமூடு தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன் ஆகியோரின் வருகை படத்துக்கு பிரமாண்டம் சேர்க்கிறது. யோகி பாபு, நமோ நாராயணன் கூட்டணியின் நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. ஆர். நிர்மலின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

மாஸ், ஆக்‌ஷன், நகைச்சுவை, பிரமாண்டம் என அனைத்து அம்சங்களையும் கலந்து ரசிக்க வைக்கும் படமாக இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

மொத்தத்தில், ‘ஜெயிலர் 2’ ரஜினி ரசிகர்களுக்கு அதிரடியான பொழுதுபோக்கு விருந்து !

Rating : 3.5 / 5 



கருத்துகள் இல்லை