சற்று முன்



E 1 (ஈ 1) திரை விமர்சனம் !



கணவன் வெளியூர் சென்ற நிலையில், கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருக்கும் மோனிகா செலினாவின் வீட்டுக்குள் மர்ம நபரான சதா நாடார் நுழைகிறார். அங்கு கிடக்கும் பிணம், அவருடைய பின்னணி, குழந்தையுடன் ஆபத்தில் சிக்கும் தாயின் போராட்டம் எனப் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது ‘ஈ1’ படத்தின் கதை.

சதா நாடார் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மோனிகா செலினா, தாயின் பயத்தையும் பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சுந்தரத்தின் மிரட்டலான நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது. மனோகுமாரின் ஒளிப்பதிவும், இ.ஜே. ஜான்சனின் பின்னணி இசையும் திரில்லர் உணர்வை அதிகரிக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள சதா நாடார், 75 நிமிடங்களில் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு என்ற சமூக அக்கறையையும் திரில்லர் பாணியில் சொல்லியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில்: ‘ஈ1’ – விறுவிறுப்பும் விழிப்புணர்வும் கலந்த திரில்லர் படம் 


Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை