ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு- தமிழ் திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஹரிஹரன் ராஜு கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒலிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி. கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கே. மனோஜ் குமார் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ் - நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படைப்பின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளான ரசிகர்களிடம் திரைப்படத்தை நேர்த்தியாகக் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் - ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வல்லமை பெற்ற லோகேஷ் கனகராஜ்- முதன் முறையாக கூட்டணி அமைத்து இணைந்திருப்பதால்.... இந்த திரைப்படத்தினை பற்றிய புதிய மற்றும் கூடுதல் தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.









கருத்துகள் இல்லை