சற்று முன்



டைட்டானிக் திரை விமர்சனம் !



மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் காதல், பிரிவு, திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் ‘டைடானிக்’.

கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் மூவரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள். குறிப்பாக, காளி வெங்கட்டின் நகைச்சுவையும், கலையரசனின் காதல் ஏக்கமும் ரசிக்க வைக்கின்றன. கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் உணர்வுகளுக்கு பலம் சேர்க்கின்றன. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தி.

காதலிக்கும்போது இருக்கும் ஈர்ப்புக்கும், திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பொறுப்புகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இயக்குநர் எம்.ஜானகிராமன் நகைச்சுவையுடனும் யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார். வழக்கமான திருப்பங்களுடன் முடிவது சிறிய பலவீனம்.

மொத்தத்தில், காதல் உணர்வுகளும் நகைச்சுவையும் கலந்த ரசிக்கத்தக்க திரைப்படம் ‘டைடானிக்’.


Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை