சற்று முன்



டெலிவரி பாய் திரை விமர்சனம் !



உணவு டெலிவரி செய்யும் இளைஞரான லியோ சிவக்குமார், தனது தாயைக் காப்பாற்றுவதற்காக பணத்தைத் திருடுகிறார். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்கச் செல்லும்போது, பணத்தின் உரிமையாளரான துஷ்யந்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிகிறார். அவரைக் காப்பாற்ற லியோ எடுக்கும் முயற்சிகளே படத்தின் விறுவிறுப்பான கதை.

நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், காதல், ஆக்‌ஷன், உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரிகிடா சாகா, காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன. குறிப்பாக சண்டைக் காட்சிகளும், துரத்தல் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

வழக்கமான கதையை விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகளுடன் வழங்கியிருக்கும் இயக்குநர் நானி, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் – அதிரடி ஆக்‌ஷன் விரும்புவோருக்கு ஏற்ற படம்!

Rating : 3 / 5 




கருத்துகள் இல்லை