சற்று முன்



எப்படி இருக்கிறது சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ – விமர்சனம்

 

இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனீஷ்காந்த், குரு சோமசுந்தரம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். டிடெக்டிவ் ட்ராமாவாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகி இருக்கும் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.


படத்தில் கிராமத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக சந்தானம் இருக்கிறார். பத்திரிகையாளராக இருக்கும் தன் நண்பனின் உதவியால் ஆங்காங்கே நடக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடிக்கிறார். ஆனால், இவர் பிரபலமான டிடெக்டிவாக இருக்க ஆசைப்படுகிறார். அப்போது நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் ஒன்று சந்தானத்திற்கு கிடைக்கிறது. இதன் பின்னணியை கண்டுபிடிக்க சந்தானம் இறங்குகிறார்.

பின் த்ரில்லர் பாணியில் சந்தானத்தின் ஜானர் தொடங்குகிறது. இறுதியில் சந்தானம் ஆசைப்பட்ட மாதிரி பிரபலமானாரா? அந்த ரயில் தண்டவாள கேசை கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் சுவாரசியமே. படத்தில் சந்தானத்தின் நடிப்பு, காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் எல்லாமே அருமையாக இருக்கிறது. சந்தானத்தை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.


அதுமட்டுமில்லாமல் படத்தில் மெடிக்கல் மாஃபியா, அதன் பின்னணியை சந்தானம் கண்டுபிடிக்கும் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
 புது சந்தானத்தை பார்த்த மாதிரி இருக்கிறது. ஒளிப்பதிவு பிரமாதம். சரியான டிடெக்டிவ் திரில்லர் படம். ஏஜென்ட் கண்ணாயிரம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறலாம்...

Rating - 3.5 / 5

கருத்துகள் இல்லை