சற்று முன்



நடிகையும், தயாரிப்பாளருமான அஞ்சலி தேவியின் 9வது ஆண்டு நினைவு நாள் !

 

ஜனவரி 13 

நடிகையும், தயாரிப்பாளருமான அஞ்சலி தேவியின் 9வது ஆண்டு நினைவு நாள். 

நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்தவர், சோமசுந்தரம். நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து, நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சித்தார். சக்தி நாடக சபாவில் நடித்து வந்த கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.நம்பியார், சிவாஜி கணேசன் உள்பட பலர் அந்த அமைப்பில் உறுப்பினரானார்கள். மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் ஒரு அறையில் சக்தி நாடக சபா குழுவினர் ஒத்திகை பார்ப்பார்கள். அங்குள்ள ஒரு சிறு அறையில் நடிகர் சங்க அலுவலகம் செயல்படத் தொடங்கியது.  ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம். உறுப்பினர் கார்டு அச்சிட 20 ரூபாய் கூட இல்லை. 

சென்னையில் படப்பிடிப்புக்கான ஸ்டுடியோக்கள் அதிகரித்த பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய  மொழிகளில் நடித்த பல நடிகர், நடிகைகள் சென்னையிலேயே தங்கினார்கள். திரைப்படக் கலைஞர்களுக்கு தொழில்முறை அமைப்பு, வேண்டும் என்ற எண்ணத்தில், இயக்குனர் கே.சுப்பிரமணியம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது.

கே.சுப்பிரமணியத்தை தொடர்ந்து டி.வி.சுந்தரம், சித்தூர் வி.நாகய்யா, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., அஞ்சலி தேவி, ஆர்.நாகேந்திர ராவ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.வி.சாமிநாதன், கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பொறுப்பு வகித்தனர். தற்போது நாசர் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.


கருத்துகள் இல்லை