Header Ads

சற்று முன்



பாடகி வாணி ஜெயராம் மறைவு " மலை " படக்குழுவினர் வருத்தம் !

 பாடகி வாணி ஜெயராம்   மறைவு  

 " மலை "  படக்குழுவினர் வருத்தம்.

பிரபல பழம் பெரும் பாடகி 

" பத்ம பூஷன் " திருமதி.வாணி ஜெயராம்  அவர்களின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் 'மலை' திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும்.

 லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில்

யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் இசை விழாவை  பெரும் விமரிசையாக நடத்தவும், 

"பத்ம பூஷன்"திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர்  திட்டமிட்டிருந்த நிலையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு 

பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும்,  இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை