Header Ads

சற்று முன்அகிலன் திரை விமர்சனம் !

 

ஜெயம் ரவி அகிலன்”” என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவியின் “பூலோகம்” படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் மீண்டும் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி போன்ற நடிகர்களுடன் இணைத்து ஜெயம் ரவி நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

அகிலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி துறைமுகத்தில் சட்டவிரோத வர்த்தகத்தின் தலைவராகவும் செயல்படும் கிரேன் ஆபரேட்டரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவற்றின் அனைத்திற்கும் தலைவனாக கபூர் இருக்கிறர். அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் அவரை சந்திக்க பல நாடுகளில் உளவு வேலை செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு இவரிடம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் அகிலனை கைது செய்ய நினைக்கும் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். இந்நிலையில் அகிலன் அந்த நபரை கடத்தினாரா? இல்லை போலீஸில் சிக்கினாரா? என்பது தான் மீதி கதையாக இருக்கிறது.

பல காலம் கழித்து தமிழ் சினிமாவில் கடல் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது, அதோடு சில துறைமுக காட்சிகளை எடுப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது என ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த கடின உழைப்பு தற்போது பலனளித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

நாயகி பிரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார் காவல்துறை அதிகாரியாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மற்றும் நாயகி தனியா ரவிச்சந்திரன் இன்னொரு ஜெயம் ரவிக்கு மனைவியாக படத்தின் இரண்டாம் பாதியில் தனியா வருகிறார் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் தன்யா வுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சென்டிமென்ட் நன்றாக உள்ளது.

படத்தின் இயக்குனர் திரைக்கதையில் அதிகமாக கவனம் செலுத்துயிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது. கதை இதுத்தான் என்று தெரிந்தாலும் கூட சில சிக்கலான திருப்பு முனைகள் மூலம் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க கடினமாக இருப்பதினால் அது சுவாரசியத்தை கூடுகிறது. பின்னணி இசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னியிருக்கிறார். இவர் சமீபத்தில் இசையமைத்து கொடுத்த அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

படத்தின் குறை என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை .

குறிப்பாக இரண்டாம் பாதியில் சில வசனங்கள் வார்த்தைகள் உள்ளன. ஆனால்  படம் பார்க்க வந்தவர்கள் கண்டிப்பாக திருப்தி அடைந்திருப்பார்கள் அதில் சந்தேகம் இல்லை. அதே போல கடல் மற்றும் கப்பல்கள் போன்ற விஷியங்களை திரைக்கு கொண்டு வருவதில் ஒளிப்பதிவாளர் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அந்த சிரமத்திற்கு பலனும் படத்தில் கிடைத்திருக்கிறது.

ஜெயம் ரவி நடிப்பு பிரமாதம். நாம் தொடர்ந்து ஜெயம் ரவியை புதிய கதாபாத்திரதில் பார்த்துள்ளோம்.

இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் படத்திற்கு தேவையானதை செய்திருக்கின்றனர். 

ஆக மொத்தத்தில் அகிலன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு வெற்றி படம்.

அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படமாக அகிலன் திரைப்படம் அமைந்துள்ளது.

Rating: 3.5 / 5


கருத்துகள் இல்லை