சற்று முன்



BABA Black Sheep திரை விமர்சனம் !


தமிழ் திரையுலகில் பிரபலமான பிளாக் ஷீப் விக்னேஷ் அவர்களின் பாபா பிளாக் ஷீப் இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பாபா பிளாக் ஷீப். இந்த படத்தில் அம்மு அபிராமி, போஸ் வெங்கட், அபிராமி, வினோதினி,ஜி பி முத்து, வெங்கட், விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  வெளியாகி இருக்கும் பாபா பிளாக் ஷீப் படம் ரசிகர்கள் மதியில்  வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் சேலம் மாவட்டத்தில் ஆண்கள் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆண்- பெண் இருபாலர் இருக்கும் பள்ளியும் நடத்தப்படுகிறது. பின் நிர்வாக பிரச்சனை காரணமாக நடத்தப்படுகிறது. இரு பள்ளிகளையும் ஒன்றிணைக்கிறார்கள். ஏற்கனவே இந்த இரு பள்ளி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு பள்ளிகள் ஒன்றாக இணைந்தவுடன் சும்மாவா இருப்பார்கள். இரண்டு கேங்க் கோஷ்டி மாணவர்களும் இடையே பிரச்சனை தொடர்கிறது.

அதுமட்டுமில்லாமல் இரண்டு கேங்க் கோஷ்டி மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கிற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இன்னும் அதிகமாகவே இரு கேங்க் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. இவர்கள் மாணவர்கள் பொதுவான தோழியாக அம்மு அபிராமி இருக்கிறார். இதில் கடைசி bench யாருக்கு என்ற சண்டை ஏற்படுகிறது. பின் பரிட்சையில் யார் கடைசி மார்க்? அறிவியல் கண்காட்சி, வினோத போட்டி என பல ரகளைகள் நடக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் எழுதிய தற்கொலை கடிதம் அம்மு அபிராமிக்கு கிடைக்கிறது. 


இதனால் பிரிந்து கிடக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி அந்த கடிதம் எழுதிய மாணவரை கண்டுபிடிக்க போராடுகிறார்கள். இறுதியில் அந்த மாணவர் யார்? அவர் ஏன் தற்கொலை மாணவர் கொண்டார்? இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இருக்கா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் பள்ளி மாணவர்களாக ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்று யூட்யூபில் பிரபலமான நபர்களே முக்கியமான கதாபாத்திரங்களாக இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் இவர்களுடைய காமெடி, நையாண்டி பேச்சுகள், வசனம் எல்லாம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளனர். அதோடு இவர்களுடைய சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும் அற்புதம்.  படத்தில் பள்ளி மாணவியாக அம்மு அபிராமி வருகிறார். அம்மு அபிராமி மிக அழகாக உள்ளார் பள்ளி மாணவிக்கு கதை கேட்ப மிக கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களை எடுத்து போஸ் வெங்கட் மிக நன்றாக நடித்துள்ளார் ஒரு தகப்பனாக தன் மகனுக்கு செய்யும் முறை அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்று தோன்றினாலும் அவர் செய்யும் காட்சிகள் ஒரு தகப்பனாக வாழ்ந்துள்ளார். 

வினோதினி நன்றாக நடித்துள்ளார் கதைக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார்.

அபிராமி நன்றாக நடித்துள்ளார் அபிராமியின் கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் நம்மை  நிஜத்தில் நடந்த கள்ளக்குறிச்சி சம்பவம் நமக்கு நினைவூட்டாக இருக்கும். அபிராமி கதாபாத்திரம்.


 அதுமட்டுமில்லாமல் காமெடிக்காக வரும் மதுரை முத்து, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜி பி முத்து அவர்கள் உடைய கதாபாத்திரமும் நன்றாக உள்ளது.  

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது பிஜிஎம் ஓகே.

பாடல்கள் கை கொடுக்கவில்லை பெரிதாக இல்லை.

மற்றபடி இப்படத்தில் எந்த குறையும் இல்லை.

படம் பார்ப்பவர்களுக்கு அனைவரும் தனது பள்ளிப் பருவத்தை நினைவூட்டும் படமாக அமைந்துள்ளது இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

இத்திரைப்படம் 2கே கிட்ஸ்க்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை