சற்று முன்



மாவீரன் திரை விமர்சனம் !

 

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாவீரன். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம்  திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. மேலும், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்

படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு அரசு அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த அதுவரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருக்கிறார். ஒரு புது முயற்சியை இந்த படத்தில் கையில் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு கோழையாக இருக்கும் ஒரு சொல்லலாம். அவனுடைய அனுமதி இல்லாமல் ஆக்ஷனாக மாறினால் என்ன ஆகும் என்ற கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் எமோஷன், காமெடி, சண்டை என எல்லா உணர்வுகளையும் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

யோகி பாபுவின் காமெடி சிரிப்பு மழையில் வெடித்து இருக்கிறது என்று சொல்லலாம். இவர்களை அடுத்து கதாநாயகியாக அதிதி நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும், இவர் செய்திருக்கிறார். வில்லனாக மிஸ்கின் நடித்திருக்கிறார். காமெடி கலந்த வில்லத் தளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா நடித்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.


ஒரு சவாலான கதையை திறமையாக சுவாரஸ்யம் குறையாமல் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு புது கதை களத்தை வித்தியாசமான முறையில் பார்வையாளர்களுக்கு சலிப்பை களத்தை கொண்டு சென்று இருக்கின்றது என்று கூறப்படுகிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு குறைகளும் இல்லை. சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததற்கு இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் மிக நன்றாக நடித்துள்ளார் இதுவரை நாம் பார்த்திராத சிவகார்த்திகேயனை இப்படத்தில் நாம் பார்ப்போம்.

யோகி பாபு நடிப்பு சிறப்பு காமெடி நன்றாக உள்ளது அவர் கொடுக்கும் கவுண்டர்  தான் இப்படத்திற்கு ஹைலைட்.

அதிதி மிக நன்றாக நடித்துள்ளார் அழகாக உள்ளார்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. பிஜிஎம் ஓகே.

ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating: 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை