சற்று முன்



Pizza 3 திரை விமர்சனம் !


திருக் குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பீட்சா -3. உணவகம் வைத்து நடத்தும் நலனுக்கு (அஸ்வின் ) அமானுஷ்யமான சில விஷங்களை பார்க்கிறார். உணர்கிறார் தொடர்ந்து கொலைகள் நடக்க இந்த கொலைகள் மீதான குற்றம் நலன் மீது விழுகிறது.இந்த தொடர் கொலைகளுக்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார் நலன்.

அவ்வப்போது அணைந்து எரியும் விளக்குகள், வெள்ளை உடையில் தலைவிரிகோலமாக வரும் பேய்கள் ரத்தம் தேய்ந்த முகங்கள் என பல பேய்படங்களில் வந்த காட்சிகளேபீட்சா 3 படத்திலும் வந்துள்ளது. பேய்கள் கொலை செய்வதற்க்கான காரணங்களும் நம்மால்  யூகிக்க முடியவில்லை.  பேய்கள் என்றால் குறைந்த பட்சம் பயமுறுத்த வேண்டாமா? பீட்சா 3 படத்தில் வரும் பேய்களை பார்த்தால் நமக்கு  பயம் பெரிதாக வரவில்லை. படத்தின் ஒளிப்பதிவு மட்டும் சிறப்பாக உள்ளது.படத்தின் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகருமான கௌரவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார். கோபம், காதல், சோகம் என நுண்ணிய உணர்வுகளை சரியாக கடத்தியுள்ளார்.அனுபமா ஒரு தாயாக மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் பலர் அந்த சிறுமிகளுக்கும், சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற சமூகம் சார்ந்த பிரச்சனையை பீட்சா 3 கதையாக எடுத்துள்ளார் இயக்குநர். இதை நன்றாக பரபரப்புடன் நகர்த்தி சுவாரசியத்துடன் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை