Header Ads

 


சற்று முன்தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அனுப்பியுள்ள கடிதம் !


தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை எம்.பி.ரஞ்சன் குமார் மாநிலத் தலைவர் 85 

நாள் : 07-08-2023

தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அனுப்பியுள்ள கடிதம் :


பெரும் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்களுக்கு,

வணக்கம். அனைத்து தீயசக்திகளுக்கு எதிராக உண்மை வென்றதற்காக வாழ்த்துகள். அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உச்ச நீதிமன்றம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, இந்தியாவில் இன்னும் ஜனநாயகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து குடிமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்காக வலியை சுமந்தும் இருக்கிறீர்கள், பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தியும் இருக்கிறீர்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு கொள்கையை முன்னெடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். தலித்துகளை உயர்த்தும் வகையில் அடிப்படை உரிமைகளை வழங்க அரசியல் சாசனம் மூலம் வழிவகை செய்யும் வகையில் சிவில் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.


அதோடு, தேசிய கல்வி உதவித்தொகை, பாபு ஜெகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜ்னா, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சிக் கழகம், தாழ்த்தப்பட்டோர் துணை திட்டத்துக்கான சிறப்பு மத்திய உதவி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச பயிற்சி, கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு, இந்திரா அவாஸ் யோஜ்னா, கல்விக்கான தேசிய கொள்கை, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளை தொடக்கம், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கியது, தேசிய எஸ்சி., நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் அமைத்தது, ராஜிவ் காந்தி தேசிய ஆராய்ச்சிக்கான உதவித்தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், எஸ்சி மாணவர்களுக்கான உயர்தர கல்வி வழங்குவதற்கான மத்திய பிரிவு உதவித்தொகை, பாபு ஜெகஜீவன்ராம் அறக்கட்டளை அமைத்தது, பொது கொள்முதல் கொள்கையில் எஸ்சிக்களையும் இணைத்தது, கையால் மலம் அள்ளுவதற்கு தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச தாழ்த்தப்பட்டோர் துணை திட்டங்கள் (நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு).

இதோடு, முற்போக்கு கொள்கையாக நிலச் சீர்திருத்தத் திட்டத்தை தலித் மற்றும் அடித்தட்டு சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த உதய்பூர் பிரகடனம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாட்டின்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலிருந்து வாக்குச்சாவடி வரையும் மற்றும் தேர்தல் வேட்பாளராகவும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 25 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியானது.

சத்தியமூர்த்தி பவன், 40, திரு.வி.க.சாலை, சென்னை - 600 002 தொலைபேசி : 044 - 2860 3945 / 2860 1949 தொலைநகல் : 044 - 2860 4243 E-Mail: mpranjankumar@gmail.com அலைபேசி : 9940388888

(3) தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை

எம்.பி.ரஞ்சன் குமார் மாநிலத் தலைவர்

நாள் : 07-08-2023

சாசனத்தை தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரை எம்பியாக்கி, அரசியல் தலித் தலைவர்களை வளர்த்தெடுத்தது காங்கிரஸ் கட்சி. அவர்களில் பி.கக்கன், பாபு ஜெகஜீவன் உருவாக்கும் குழுவின் தலைவராகவும் நியமித்தது காங்கிரஸ் கட்சி தான். பெற்ற தாயைப் போல பல ராம், தாமோதரம் சஞ்சீவய்யா, சுஷில் குமார் ஷிண்டே, இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர், மல்லிகார்ஜுன் கார்கே, கே.ராஜு, ராஜேஸ் லிலோதியா உள்ளிட்ட ஏராளமானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எம்பிக்களாகவும், சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், பல்வேறு அரசு பதவிகளிலும் இருந்துள்ளனர். இவர்கள் தலித் மற்றும் மற்ற அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள்.

தமிழ்நாட்டில் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 2 பேர் மட்டுமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருவரில் ஒருவருக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தலித் சமுதாயத்துக்கு பல்வேறு பணிகளைச் செய்திருந்த போதிலும், எண்ணற்றோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்ட போதும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மற்ற சமுதாயத்தினருக்கு இணையாக உயர நலத்திட்டங்கள் மற்றும் பல முயற்சிகளை செய்த போதிலும், காங்கிரஸின் பங்களிப்பை இன்றைய தலைமுறையினர் உணராதது பெரும் வேதனை அளிக்கிறது. எனவே, இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், அவர்கள் இதயங்களில் காங்கிரஸ் எனும் கனலைப் பற்ற வைக்கவும் சென்னையில் தலித் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம். முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாவட்டம், வட்டார மற்றும் அனைத்து முன்னணி பிரிவுகளை அழைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, பிரிவு திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளும் முன்பு உங்களுடனும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மல்லிகார்ஜுன் கார்கே உடன் தலித் செயல்பாட்டாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சியாகவே தலித் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.

நீங்கள் தற்போது மிக மும்முரமாக இயங்கி வரும் சூழலில் நேரத்தை ஒதுக்கி, சென்னையில் நடைபெறும் தலித் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மாநாட்டில் உங்களின் பங்கேற்பு, பெருங்கூட்டத்துக்கு குறிப்பாக தலித் மற்றும் அடித்தட்டு மக்களிடம் முற்றிலும் நேர்மறையான தகவலைக் கொண்டு சேர்க்கும். உங்களது தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு, மாநாடு நடக்கும் தேதியும் நேரமும் இறுதி செய்யப்படும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை