சற்று முன்



சென்னையிலுள்ள கேமிங் ஆர்வலர்களுக்கு பிரபல ஷூட்டர் கேம் வெலோரண்ட் வழங்கும் 'டீம் டெத்மேட்ச்' மோட் !


சென்னையிலுள்ள கேமிங் ஆர்வலர்களுக்கு பிரபல ஷூட்டர் கேம் வெலோரண்ட் வழங்கும் 'டீம் டெத்மேட்ச்' மோட் !

இப்புதிய மோடின் அணுகல் எளிதானது, நண்பர்களுடன் வெலோரண்ட் கேம்பிளேவை வேடிக்கையாக அனுபவிப்பதை சாத்தியமாக்கியுள்ளது 

23 ஆகஸ்ட், 2023: பிரபலமான ஃப்ரீ-டு-ப்ளே ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் கேம், வெலோரண்ட், சென்னையில் வளர்ந்து வரும் கேமர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக டீம் டெத்மேட்ச் என்னும் புதிய மோடை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய மோடானது வீரர்களை வெலோரண்ட் கேம்பிளேயை வேடிக்கையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் அனுபவிக்க அனுமதிக்கிறது .

வெலோரண்ட் என்பது ரயட் கேம்ஸ் வழங்கும், ஒவ்வொரு அணியிலும் 5 வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளை உள்ளடக்கிய ஒரு முன்னணி பிசி டேக்டிக்கல் ஷுட்டிங் கேம் ஆகும். ஒவ்வொரு வீரரும் உலகில் எங்கிருந்தும் உள்நுழைந்து ரிமோட் நிலையில் விளையாடலாம். கேமின் தொடக்கத்தில், வீரர்கள் பல்வேறு இன்-கேம் ஏஜெண்ட்களில் இருந்து தேர்வு செய்யும் விருப்பம் ஒன்னது. அவை ஒவ்வொன்றும் உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் தனித்துவமான பின்னணி கதையுடன் அமைந்துள்ளது. 2022 இல், வெலோரண்ட் இந்தியாவின் கடற்கரையிலிருந்து வரும் ஏஜென்ட் ஹார்பரை வெளியிட்டது. ஹார்பரின் அறிமுகமானது மும்பையில் ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்வால் குறிக்கப்பட்டது, மேலும் இந்திய கேமிங் சமூகம் மற்றும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டீம் டெத்மேட்ச், சமீபத்திய 5v5 கேம் மோட், மூன்று புதிய கஸ்டம் மேப்ஸில் ஒன்றில் எதிரி அணிக்கு எதிராக வீரர்களை நிறுத்துகிறது. டீம் டெத்மேட்ச்சில், ஆட்டத்தின் தொடக்கத்திலோ அல்லது ஸ்பான்ரூமில் இருக்கும் எந்த நேரத்திலோ வீரர்கள் ஒவ்வொரு கட்டத்திற்கும் தங்கள் லோட்அவுட்டைத் தேர்வு செய்யலாம். வெப்பன் ஸ்பானர்கள் மேப்பைச் சுற்றிலும், ரெக்கவரி மற்றும் அல்டிமேட் ஆர்ப்ஸில் வைக்கப்படுவர். நான்கு டைம்டு ஸ்டேஜ்களில், நோ-ஈகான் மற்றும் ஒவ்வொரு 1.5 வினாடிகளிலும் வீரர்கள் மீண்டும் தோன்றுவதால், வெற்றிக்கான திறவுகோல் எளிதானது: 100 கில்களைப் பெறும் முதல் அணி வெற்றி பெறும். புதிய கேம் மோட் டீம் டெத்மேட்ச் ஆனது, வெலோரண்ட் போட்டிகளின் உற்சாகமான செயலில் நேரடியாக மூழ்கி, நண்பர்களுடன் விளையாட்டை ரசிக்கும் பல்வேறு திறன் நிலைகளைக் கொண்ட புதிய வீரர்களைக் கவரும் வகையில் விரைவான மற்றும் அதிரடி-நிரம்பிய மோடாக வடிவமைக்கப்பட்டுள்ளது .

"இந்திய கேமிங் சமூகத்தின் ஆர்வமும் உற்சாகமும் எங்களுக்கு உத்வேகத்தின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. உள்ளூர் விளையாட்டாளர்களுக்கு டீம் டெத்மேட்ச் போன்ற அற்புதமான முன்னேற்றங்களைக் கொண்டு வர, பிராந்தியத்தில் ஒரு வலுவான ரயட் குழுவை உருவாக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். எங்கள் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இந்தியாவிலும் தெற்காசியாவிலும் தொடர்ந்து முதலீடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” – என்று கூறினார், ரயட் கேம்ஸ் இந்தியா & தெற்காசியாவின் தேசிய மேலாளர் திரு.அருண் ராஜப்பா அவர்கள். 

டீம் டெத்மேட்சிற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்ப்பு மிகுந்த ஊக்கமளிக்கிறது, மேலும் வெலோரண்ட்க்குப் பின்னால் உள்ள குழு வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய வழிகளை ஆராய்வதில் உறுதியாக உள்ளது. புதிய கேம் மோடை முயற்சிக்க ஆர்வமுள்ள விளையாட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக சென்னையில் உள்ள LXG நுங்கம்பாக்கம் போன்ற முக்கிய கேமிங் கஃபேக்களில் ரைட் கேம்ஸ் வாக்-இன் வெலோரண்ட் போட்டிகளை நடத்துகிறது .

“டீம் டெத்மேட்ச்சின் வேகமான தன்மையானது, அனுபவம் மற்றும் திறமையின் அனைத்து நிலைகளையும் கொண்ட கேமர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கேம் மோடின் மூலம் எங்களின் குறிக்கோள், சென்னையில் உள்ள புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு பலனளிக்கும் மற்றும் சுவாரஸ்யமாக இருக்கும் முக்கிய வெலோரண்ட் அனுபவத்தின் எளிய, அணுகக்கூடிய பதிப்பை வழங்குவதாகும். வெலோரண்ட் சமூகம் எவ்வாறு மேம்பட்டு பரிணாம வளர்ச்சியடையும் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் அதன் வளர்ச்சியை ஆதரிக்கவும் வளர்க்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” – என்று கூறினார், ரயட் கேம்ஸ் இந்தியா & தெற்காசியாவின், சந்தையாக்கல் பிரிவில் தலைவர், திரு.ஆஷிஷ் குப்தா அவர்கள்.

இந்திய கேமிங் பிரிவில் பரபரப்பை உருவாக்கியுள்ள, டீம் டெத்மேட்ச் என்ற புதிய முறை கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. Hydraflick (327K சந்தாதாரர்கள்), Euphoria (103K சந்தாதாரர்கள்), மற்றும் SKRossi (151K சந்தாதாரர்கள்) போன்ற பிரபலமான இந்திய கேமிங் இன்ஃப்ளுயன்ஸர்கள் YouTube இல் தங்கள் பார்வையாளர்களுக்காக கேம்ப்ளேவை புதிய முறையில் ஸ்ட்ரீமிங் செய்து வருகின்றனர். https://playvalorant.com/  தளத்தில் வெலோரண்ட் விளையாடக் கிடைக்கிறது

ரயட் கேம்ஸ் குறித்து

பிராண்டன் பெக் மற்றும் மார்க் மெரில் ஆகியோரால் நிறுவப்பட்ட மற்றும் CEO நிக்கோலோ லாரன்ட் தலைமையில் வழிநடத்தப்படும் ரயட், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளது. மேலும் உலகளவில் 20+ அலுவலகங்களில் 4,500+ ரயட்டர்களைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில், ரயட் அதன் முதல் டைட்டிலான லீக் ஆஃப் லெஜெண்ட்ஸை உலகளவில் வெளியிட்டது. லீக் உலகில் அதிகம் விளையாடப்படும் பிசி கேம் மற்றும் ஈஸ்போர்ட்ஸின் பிரம்மாண்ட வளர்ச்சியின் முக்கியக் காரணியாக இருந்தது.

வெலோரண்ட் என்பது ரயட் கேம்ஸ் உருவாக்கிய PCக்கான 5v5 கதாபாத்திரங்கள் அடிப்படையிலான டேக்டிக்கல் ஷூட்டர் கேம் ஆகும். வெலோரண்ட் என்பது துல்லியமான மற்றும் ஆபத்தான மல்டிபிளேயர் கேம் ஆகும், இதில் அதிக நம்பகத்தன்மை கொண்ட துப்பாக்கிப் பிரயோகம், பலதரப்பட்ட துப்பாக்கிகள், தனித்துவமான திறன்களைக் கொண்ட ஏஜென்ட்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மணிநேரம் விளையாடுவதற்கு போட்டித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட வரைபடங்கள் உள்ளன.

வெலோரண்ட் ஒரு இலவசமாக-விளையாடக்கூடிய கேம் மற்றும் பல்வேறு வகையான PC வன்பொருளில் செயல்பட உகந்ததாக உள்ளது, இது உலகளாவிய பார்வையாளர்களை போட்டியிட அனுமதிக்கிறது. கேமின் சிறந்த-இன்-கிளாஸ் கேம் சர்வர் தரம், உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் தனியுரிம மோசடி எதிர்ப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றால் நிரூபிக்கப்பட்ட ரயட் கேம்ஸ், டேக்’டிக்கல் ஷூட்டர் வகையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் கேம்பிளே அனுபவத்தின் போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை