சற்று முன்



காஞ்சிபுரத்தில் 2 புதிய சிஎன்ஜி நிலையங்கள் திறப்பு !


இயற்கை எரிவாயு நிலையங்களை விரிவுபடுத்தும் ஏஜி&பி பிரதம் நிறுவனம்

காஞ்சிபுரத்தில் 2 புதிய சிஎன்ஜி நிலையங்கள் திறப்பு

சென்னை,செப்டம்பர் 14,2023: இந்திய நகரங்களில் எரிவாயு வினியோகம் செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏஜி&பி பிரதம் நிறுவனம், காஞ்சிபுரத்தில் மேலும் புதிதாக 2 சிஎன்ஜி நிலையங்கலை திறந்துள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரத்தில் இதன் கியாஸ் நிரப்பும் மையங்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.   தற்போது இந்நிறுவனத்தின் மூலம் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘டாட்டர் பூஸ்டர் ஸ்டேஷன்’ (Daughter Booster Station) என்னும் டிபிஎஸ் நிலையத்தில் ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார், பஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிபொருள் எந்தவித தடையும் இன்றி வினியோகம் செய்யப்படும் என்று ஏஜி&பி பிரதம் தெரிவித்துள்ளது.

சிட்லபாக்கம்,எச்பிசிஎல்(HPCL) மகாலட்சுமி ஏஜென்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் 30வது மையத்தை தாம்பரம் எம்.எல்.ஏ. திரு.கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் துணை மேயர் காமராஜ், 2வது மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, எச்பிசிஎல்(HPCL) டீலர் மகாலட்சுமி கருணாகரன்,  ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சித்ரதீப் தத்தா மற்றும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டல தலைவர் திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

31வது சிஎன்ஜி நிலையம் குரோம்பேட்டை, திருநீர்மலை சாலையில் உள்ள ஏபி எண்டர்பிரைசஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பங்க்கில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை ஐஓசிஎல், தமிழ்நாடு, செயல் இயக்குனர் வி.சி. அசோகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஐஓசிஎல் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் மற்றும் விற்பனை அதிகாரி முத்துக்குமரன் மற்றும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டல தலைவர் திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய நிலையங்கள் திறந்திருப்பது குறித்து ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டல தலைவர் திருக்குமரன் கூறுகையில், பசுமை எரிசக்தி பயன்பாடு என்ற தேசத்தின் முக்கிய இலக்கை அடையும் நோக்கில், தமிழ்நாடு, காஞ்சிபுரம் முழுவதும் எங்களது இயற்கை எரிவாயு வினியோக செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில், எங்கள் நிறுவனத்தால் துவக்கப்பட்ட முதல் ரெட்ரோ-பிட்மென்ட் சென்டரான ஏஜி&பி பிரதம் ரெட்ரோ சோன் மூலம் வழக்கமான பெட்ரோலிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை சிஎன்ஜி வாகனங்களாக மாற்றி வருகிறோம். தற்போது குரோம்பேட்டை பகுதியில் எங்களின் இரண்டு நிலையங்களைத் திறந்து இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவை சிஎன்ஜி வாகன உரிமையாளர்களுக்கு சேவையை வழங்குவதோடு, தூய்மையான மற்றும் பசுமையான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் அதிகரிக்கும். வாகன உரிமையாளர்களிடையே சிஎன்ஜி மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிதியாண்டின் இறுதிக்குள் 111 சிஎன்ஜி நிலையங்கள் மூலம் எங்கள் இயற்கை எரிவாயு செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் திருக்குமரன் கூறுகையில், சிஎன்ஜி–யை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் எரிபொருள் செலவை  45 சதவீதம் குறைத்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். மேலும் இது வாகனத்தின் என்ஜினை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, அதிக மைலேஜ் மற்றும் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, வாகன பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறையும். மேலும் வாகனங்களில் சிஎன்ஜியைப் பயன்படுத்துவதால், அது மாசுபாட்டை வெகுவாக குறைக்கிறது, இது வழக்கமான பெட்ரோலிய பொருட்களில் இருந்து வெளியேறும் கார்பனைவிட குறைந்த அளவு கார்பனையே வெளியேற்றும். எனவே இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த எரிபொருளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏஜி&பி பிரதம் பற்றி: ஏஜி&பி பிரதம் நிறுவனம், இந்திய நகர எரிவாயு வினியோகத் துறையில் முன்னணியில் திகழும் சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு நகர எரிவாயு வினியோகத்திற்கான 12 உரிமங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வழங்கி உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 37 மாவட்டங்களில் அன்றாடப் பயன்பாட்டிற்கான இயற்கை எரிவாயுவை பிரத்தியேகமாக வழங்குகிறது. இந்நிறுவனம் வீடுகள், தொழில்துறை, வணிகம், வணிகம் அல்லாத மற்றும் உள்நாட்டு விலக்கு பெற்ற வணிக  நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு, மற்றும் வாகன பயன்பாட்டிற்கான சிஎன்ஜி ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் நெட்வொர்க்கானது 278,000 சதுர கிலோமீட்டர், 17,000 இன்ச்-கிமீ பைப்லைன் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட புதிய சிஎன்ஜி நிலையங்களை உள்ளடக்கி உள்ளது.

To find out more, visit www.agppratham.com and follow AG&P Pratham’s official social media pages:


•        www.linkedin.com/company/ag-p-pratham/

•        www.facebook.com/agppratham/

•        www.instagram.com/agppratham/

•        www.twitter.com/agppratham/



காஞ்சிபுரத்தில் ஏஜி&பி பிரதம் செயல்பாடுகள் பற்றி: இந்தியாவின் முன்னணி நகர எரிவாயு வினியோக நிறுவனமான ஏஜி&பி பிரதம் கடந்த 2021–ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இம்மாவட்டத்தில் முதன்முதலாக நுழைந்த இந்நிறுவனம், வீடுகளுக்கு தேவையான எரிவாயு, வாகனங்களுக்கான எரிவாயு, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான சிஎன்ஜி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 30 எரிவாயு நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் பஸ், கார், ஆட்டோ, இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பிஎஸ்6 வாகனங்களுக்கான எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. நிறுவனம் 30,813 வீடுகளுக்கு இணைப்பை வழங்கி உள்ளதோடு, 7 முக்கிய தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. சுமார் 170 தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் குழாய் இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை