Header Ads

 


சற்று முன்ஹோண்டா கார்ஸ் இந்தியா தமிழ்நாட்டில் ஹோண்டா ELEVATEஐ அறிமுகப்படுத்தியுள்ளது !


ஹோண்டா கார்ஸ் இந்தியா தமிழ்நாட்டில் ஹோண்டா ELEVATEஐ அறிமுகப்படுத்தியுள்ளது: நகர்ப்புற SUV சிறப்புத்தன்மையின் ஒரு புதிய அத்தியாயம் INR 10,99,900 அறிமுக விலையில் தொடங்குகிறது !

ஹோண்டா Elevate INR 10,99,900 - INR 15,99,900 என்ற அறிமுக விலையில் கிடைக்கும்.

டீலர்ஷிப்கள் முழுவதும் இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரிகள் தொடங்குகின்றன

ஹோண்டா Elevate அறிமுகப்படுத்தப்படும் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது

'அர்பன் ஃப்ரீஸ்டைலர்' கருத்தாக்கம் புதிய SUVயின் கம்பீரமான, ஆண்மை ததும்பும் வடிவமைப்பை மேம்படுத்துகிறது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு CVT டிரான்ஸ்மிஷன்கள் இணைக்கப்பட்ட 1.5லி i -VTEC பெட்ரோல் எஞ்சின் , விசாலமான உட்புறங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு அம்ச தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஹோண்டா SENSING இன் ADAS தொழில்நுட்பம் உட்பட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் முழு வரிசை இடம்பெற்றுள்ளன 

4 கிரேடுகளில் சிங்கிள்-டோனில் 7 வண்ண விருப்பங்கள் மற்றும் டூயல்-டோனில் 3 வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது.

சென்னை, 8 செப்டம்பர் 2023 : இந்தியாவில் பிரீமியம் கார்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், அதன் சமீபத்திய உலகளாவிய SUVயான ஹோண்டா Elevateடை இன்று அறிமுகப்படுத்தியது . இந்த வாகனம் INR 10,99,900 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) முதல் டாப் வேரியண்ட் INR 15,99,900 வரையிலான (எக்ஸ்-ஷோரூம், சென்னை) அறிமுக விலையில் கிடைக்கும். நாட்டில் உள்ள டீலர்ஷிப்களில் இன்று முதல் Elevateடின் டெலிவரி தொடங்கும்.

சொகுசு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் Elevate வெளிப்படுத்துகிறது மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் அதன் உலகளாவிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டது.

துடிப்பான வாழ்க்கை முறை மற்றும் உலகளாவிய மனநிலையுடன் வாடிக்கையாளர்களை ஈர்த்திடும் வகையில், ஹோண்டா Elevate, 'அர்பன் ஃப்ரீஸ்டைலர்' என்ற சிறந்த கருத்தாக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் அமைந்துள்ள ஹோண்டா R&D ஆசிய பசிபிக் மையத்தால் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய Elevate, கௌரவம், சொகுசு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை விரும்பும் இளைய வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும். 4312 மிமீ நீளம், 1790 மிமீ அகலம், 1650 மிமீ உயரம், 2650 மிமீ வீல்பேஸ் மற்றும் உயர்தர கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய பரிமாணங்களுடன் Elevate ஸ்டைலையும் நடைமுறைத் தன்மையையும் சீராக ஒருங்கிணைக்கிறது.

இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUVயின் இந்திய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டகுயா சுமுரா அவர்கள், "அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடுத்தர அளவிலான SUVயான ஹோண்டா Elevateடை இன்று அறிமுகப்படுத்துவது ஒரு அற்புதமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் ஹோண்டா கார்களுக்கு தமிழ்நாடு ஒரு முக்கிய சந்தையாகும். Elevateடின் வளர்ச்சி விரிவான ஆராய்ச்சி மற்றும் விலைமதிப்பற்ற வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு சான்றாகும். அற்புதமான டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் பாதுகாப்புடன் வசதியும் நிறைந்த இன்-கேபின் அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கம்பீரமான ஸ்டைல் உள்ள SUVயாக Elevate நிலைநிறுத்தப்படுகிறது" என்று கூறினார்.

மேலும் பேசிய, திரு.டகுயா சுமுரா அவர்கள், “ஹோண்டா Elevate மூலம், இந்தியாவில் மிகவும் உற்சாகமான ஆட்டோ பிரிவுகளில் ஒன்றில் நாங்கள் கால்பதிக்கிறோம். இந்தத் தயாரிப்பைச் சுற்றியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் சலுகைகளில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் ஹோண்டாவின் வணிகத்தின் முக்கிய தூணாக மாறும் திறனை ஹோண்டா Elevate கொண்டுள்ளது, இது எங்கள் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்குகிறது” என்று கூறினார்.

Elevate ஒரு 1.5L i -VTEC DOHC பெட்ரோல் எஞ்சின் மூலம் 89 kW (121 PS) ஆற்றலையும் 145 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது , 6 -ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷனுடன் (CVT) இணைக்கப்பட்டுள்ளது சீரான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது மற்றும் எரிபொருள் திறன் முறையே 15.31 kmpl* மற்றும் 16.92 kmpl* ஆகும். ஹோண்டா Elevate E20 மெட்டீரியல் இணக்கமானது (20% வரை எத்தனால் கலந்த பெட்ரோல்).

ஹோண்டா Elevate ஒரு கம்பீரமான மற்றும் ஆண்மை ததும்பும் வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது . உள்ளே, வடிவமைப்பு "முற்போக்கானது மற்றும் பாதுகாப்பானது" என்ற கருத்தாக்கத்துடன் இணைந்துள்ளது , இது ஒரு லட்சிய உணர்வு, சொகுசு, நடைமுறை மற்றும் பாதுகாப்பான கேபின் ஆகியவற்றை உள்ளடக்கியது. "மேன் மேக்சிமம் மற்றும் மெஷின் மினிமம்" என்ற ஹோண்டாவின் தத்துவத்திற்கு இணங்க, உயர்தர வீல்பேஸ், விசாலமான ஹெட்ரூம், முழங்கால் அறை, லெக்ரூம் மற்றும் வகையினத்தில் சிறந்த கார்கோ ஏரியா ஆகியவற்றைக் கொண்ட Elevate ஒரு ஈர்க்கக்கூடிய கேபின் உட்புறத்தை வழங்குகிறது.

புத்தம் புதிய Elevateடின் கம்பீரமான தனித்துவமான முன் வடிவமைப்பு, நம்பிக்கையான வெளிப்பாட்டைக் காட்டும் மெலிதான மற்றும் கூர்மையான ஹெட்லைட்களுடன் இணைந்து தடிமனான சுயவிவரத்தின் மூலம் கம்பீரமான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. LED DRLகள் மற்றும் LED டர்ன் இன்டிகேட்டர் கொண்ட முழு LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED டெயில்லேம்ப்கள் மற்றும் டூ-டோன் ஃபினிஷ் டைமண்ட் கட் R17 அலாய் வீல்களுடன் சேர்ந்து, Elevate மாடலுக்கு தனித்துவமான, நவீன மற்றும் ஸ்போர்ட்டியான பண்புகளை வழங்குகிறது.

வகையினத்தின் சிறந்த 458L கார்கோ ஸ்பேஸ், அதிக விசாலமான இன்டீரியர் அறை , 17.78cm (7-இன்ச்) உயர்-வரையறை முழு வண்ண TFT மீட்டர் கிளஸ்டர், ஒரு புதிய ஃபுளோட்டிங் வகை 26.03cm (10.25inch) இன்-பிளேன் ஸ்விட்ச்சிங் (IPS) ஹை-டிஃபினிஷன்) ரெசொல்யூஷன் LCD தொடுதிரை காட்சி ஆடியோ மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் . கூடுதலாக, டாஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்ஸில் மென்மையான டச் பேட்களுடன் கூடிய ஆடம்பரமான பிரவுன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி முற்போக்கான மற்றும் பாதுகாப்பு அறைக்கு பிரீமியத்தை சேர்க்கிறது.

புத்தம் புதிய எலிவேட்டில் ஹோண்டா கனெக்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது; இணைக்கப்பட்ட கார் அனுபவம், பயனர்கள் காரை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் மேம்பட்ட வசதிக்காகவும் மன அமைதிக்காகவும் முக்கியமான அறிவிப்புகளுடன் புதுப்பித்துக்கொள்ளலாம். ஹோண்டா Elevate அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஹோண்டா கனெக்ட் புதிய மற்றும் அற்புதமான அம்சங்களைப் பெறுகிறது- திரையில் ஷார்ட்கட் விட்ஜெட்டுடன் தனிப்பயனாக்கப்பட்ட டைனமிக் டாஷ்போர்டு, டிஜிட்டல் சேவை பிக்-அப் & டிராப் வசதி, HPCL நெட்வொர்க் மூலம் எரிபொருள் கட்டணத்தில் கூடுதல் வெகுமதி புள்ளிகள், முன் சொந்தமானவற்றை வாங்குதல் மற்றும் விற்பது, கார், துணைக்கருவிகளின் ஒருங்கிணைப்பு – TPMS # (டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்) & DVR # (டிரைவ் வியூ ரெக்கார்டர்). இந்தப் புதுப்பித்தலுடன், ஹோண்டா கனெக்ட் இப்போது 37 மிகவும் பயனுள்ள இணைப்பு அம்சங்களை வழங்குகிறது மற்றும் சிறந்த 5 ஆண்டு இலவச சந்தா தொகுப்புடன் வருகிறது.

ஹோண்டா கனெக்ட் ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் மற்றும் அலெக்சா ரிமோட் திறனுடன் செயல்படுகிறது .

வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பங்கள் மற்றும் ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கிள்-டோன் மற்றும் டூயல்-டோனில் ஈர்க்கக்கூடிய வண்ணத் தேர்வுகளில் Elevate வழங்கப்படும் . ஃபீனிக்ஸ் ஆரஞ்சு பேர்ல் (புதிய நிறம்), அப்சிடியன் புளு பேர்ல், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் வொயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் மீட்டியராய்டு கிரே மெட்டாலிக்  ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வரம்பு சாலையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பார்வைக்கு குறிப்பிடத்தக்க தோற்றத்தை உருவாக்குகிறது .

பாதுகாப்பிற்கான ஹோண்டாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, Elevate ஆனது ஹோண்டா சென்சிங்கின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உட்பட, நேரடி மற்றும் மறைமுக பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் விரிவான வரம்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஹோண்டாவின் நீண்டகால “அனைவருக்கும் பாதுகாப்பு” அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது, இது கார் மற்றும் சாலைப் பயனாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. Elevateடில் ACE™ பாடி அமைப்பு, 6 காற்றுப்பைகள், LaneWatch™ கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோலுடன் வாகன நிலைப்புத்தன்மை அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், மல்டி ஆங்கிள் ரியர்-வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் , ISOFIX இணக்கமான பின் பக்க இருக்கைகள் மற்றும் கீழ்மட்ட ஆங்கரேஜ்கள் மற்றும் டாப் டீத்தர் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஹோண்டா Elevate ஆக்சஸரீஸ்களின் முழுமையான வரிசையுடன் வருகிறது. H-கனெக்டுடன் இணைக்கப்பட்ட மசாஜர், DVR & TPMS போன்ற காற்றோட்டமான சீட் டாப் கவர் போன்ற உயர் மதிப்பு உபகரணங்களை எங்களின் அனைத்து டீலர்ஷிப்களிலும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்குதல் தேர்வை வழங்க, 2 அற்புதமான தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: சிக்னேச்சர் பேக்கேஜ் - ஸ்பாய்லர்கள் மற்றும் குரோம் அலங்காரங்கள் மற்றும் ஆர்மர் பேக்கேஜ் மூலம் வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்த - பாதுகாப்பை வழங்க மற்றும் கம்பீரமான தோற்றத்தை மேம்படுத்த இவை உதவுகின்றன. மொத்தத்தில், Elevateடில் 36 துணை பொருட்கள் வழங்கப்படும்.

ஹோண்டா Elevate வாடிக்கையாளர்களுக்கு நிலையான நன்மையாக 3 வருட வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் முழுமையான மன அமைதியை வழங்கும். வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும், எப்போது வேண்டுமானாலும் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதத்தையும் மற்றும் கார் வாங்கிய தேதியிலிருந்து சாலையோர உதவியையும் தேர்வு செய்யலாம் .

Introductory Price in Indian Rupees (Ex-Showroom Chennai):

Honda Elevate

SV

V

VX

ZX


MT 

10,99,900

12,10,900

13,49,900

14,89,900


CVT

-

13,20,900

14,59,900

15,99,900

பேர்ல் மற்றும் டியூயல் டோன் எக்ஸ்டீரியர் வண்ணங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் பொருந்தும்.

 CMVR 1989 விதி 115ன் கீழ் சான்றளிக்கப்பட்டது

TPMS மற்றும் DVR அம்சங்கள் நிலையான H-Connect அம்சங்கள் தொகுப்பின் ஒரு பகுதியாக இல்லை. இந்த அம்சங்களைப் பயன்படுத்த வாடிக்கையாளர் TPMS மற்றும்/அல்லது DVR பாகங்கள் வாங்க வேண்டும்.

ஹோண்டா ELEVATEக்கான இணைப்புகள்  

ஹோண்டா ELEVATE விளக்கக்குறிப்பு 

https://drive.google.com/drive/folders/1ratOTSMEYkuYYUCgxaDPR-OywqtmHI3Q

ஹோண்டா ELEVATE TVC

https://drive.google.com/drive/folders/1Ee9PE7PaYynmpRt1Iy1pxiup2AEm3-yW


மொத்த இணைப்பு: https://drive.google.com/drive/folders/1xHaGkPUTyRzyztta6YiYkzCvD4SkZ302?usp=sharing

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை