Miss Shetty Mr Polishetty திரை விமர்சனம் !
தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகை அனுஷ்கா அவரது நடிப்பில் Miss Shetty Mr Polishetty இந்த கதையினை இயக்குனர் மஹேஷ் பாபு இயக்கியுள்ளார்.
தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார் அனுஷ்கா. தனக்கு எல்லாமுமே தாய் தான் என்று இருக்கிறார். லண்டனில் மிகப்பெரும் நிறுவனத்தில் CHIEF குக்காக பணிபுரிகிறார் அனுஷ்கா.
தனது தாய்க்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதை அறிந்து ஷாக் ஆகிறார் அனுஷ்கா. இந்தியா வரும் அனுஷ்கா தாயைப் போல் அன்பு செலுத்த மற்றொரு துணை வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார் அனுஷ்கா.
அனுஷ்கா UK வில் தனது அம்மாவுடன் வாழ்ந்து இருக்கிறார். தனது சிறுவயதிலேயே அப்பா, அம்மா பிரிந்ததை பார்த்த அனுஷ்கா தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதல் சென்னைக்கு வருகின்றனர். பிறகு அவரின் அம்மாவும் இறந்துவிடுகிறார். அப்போது சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருமணமே செய்துகொள்ளாமல் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறார்.
தான் கருத்தரிப்பதற்காக அனுஷ்காவிற்கு தேவைப்படுவது ஒரு Sperm Donor மட்டுமே, அதற்காக சரியான ஆளை தேடுகிறார். அப்போது எதார்த்தமாக கதையின் நாயகன் நவீனை சந்திக்கிறார். அவர் இதற்கு சரியாக இருப்பாரா? இல்லையா? என தெரிந்துகொள்ள அவருடன் நெருங்கி பழகுகிறார். அதே சமயம் நவீன், அனுஷ்காவை காதலிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் அனுஷ்கா நினைத்தபடி நவீன் மூலம் அனுஷ்கா கருத்தரித்தாரா? அல்லது நவீன் அனுஷ்காவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை…
மிக சுவாரஸ்யத்துடன் காமெடியுடன் இயக்குனர் இயக்கியுள்ளார்.
மிக யதார்த்தமான நடிப்பு அனுஷ்காவிற்கு படம் மிகப்பெரிய கம் பேக் இருக்கும்.
அனுஷ்காருக்கு இணையாக நவீன் நடித்துள்ளார்.
இரண்டாம் பாதி முழுவதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
மிக நகைச்சுவையாக திரை கதையை நிகழ்த்தியுள்ளார் இயக்குனர்.
ரதனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே இளைஞர்களை கட்டி போடும் ஒரு சில காமெடிகள் இருப்பதால் எந்த இடத்திலும் சோர்வடைய விடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர்.. நீரவ் ஷா’ன் ஒளிப்பதிவு லண்டனை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுஷ்காவை நம் திரையரங்குகளில் காண்கிறோம். மிக அழகாக நடித்துள்ளார் .
அனுஷ்காவை மேலும் அழகாகவும் காட்டியிருக்கிறார் நிரவ்ஷா, படத்தின் ஆரம்பத்திலேயே வரும் கிச்சன் காட்சிகளை அவ்வளவு அழகாக கொடுத்திருக்கிறார்.
காதல் என்றால் என்ன தனக்கான அன்பு எதிலிருந்து கிடைக்கிறது யாருக்காக அன்பை கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து நகர்த்தி நம்மை படம் முழுவதையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.
இத்திரைப்படம் அனுஷ்கா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது.
இளைஞர்கள் பார்க்கக் கூடிய திரைப்படம்.
மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 4 / 5
கருத்துகள் இல்லை