சற்று முன்



வட்டார வழக்கு திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான சந்தோஷ் நம்பி ராஜன் நடிப்பில் வட்டார வழக்கு மற்றும் ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்தி வீரன் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்கியுள்ளார் கண்ணுச்சாமி ராமச்சந்திரன

மதுரை பின்னணியில் அமைக்கப்பட்ட பங்காளி.சண்டை கதை.

சொத்து பிரிப்பதில் ஏற்படும் பங்காளி சண்டை இரண்டு குடும்பங்களின் பகையாக மாறு கிறது. நேரம் பார்த்து ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்கின் றனர். இந்நிலையில் சந்தோ சுக்கும்,  ரவீனாவுக்கும் காதல்  மலர்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது அதிக காதலில்.இருக்கிறார். ஒரு சமயம்  ரவீனா, கதிர் அடிக்கும் எந்திரம் அருகே , நிற்கும்போது அவரது ஆடை மோட்டாரில் சிக்கி கிழிந்து அரை நிர்வாணமாகிறார் . ஊரும் அதை பார்க்கிறது இதையறிந்த சந்தோஷ் அவள் மீது கோபம் கொள்கிறான். அவளிடம் பேசுவதை தவிர்க்கிறான்  மனம் உடைந்த ரவீனா விபரீத முடிவு எடுக்கிறார். அதைக் கண்டு கதறும் சந்தோஷ் மனநிம்மதி இழந்து வாடுகிறார் .இந்நிலையில் அவர் கொல்லப்படுகிறார்.  கொன்றது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் .

நீண்ட நாட்களுக்கு பிறகு, ஏன் நீண்ட வருடங்களுக்கு பிறகு என்று கூட இளையராஜா இசையில் முழுக்க ஒரு கிராமத்து படம்  வந்திருக் கிறது. அவரின் பாங்கான இசையும் 70ஸ் 80ஸ் கால கட்ட பாடல்களும் செவிக்கு இனிதாக வந்து பேசுவது அந்த காலகட்டத்துக்கே ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. இசைஞானி இசை நம்மை உருக்கி விட்டது.

கோபக்கார இளைஞனாக சந்தோஷ்.நடித்திருக்கிறார். தெனாவட்டான நடையும் எதற்கெடுத்தாலும் கைநீட்டி அடிக்கச் செல்வதுமாள அசல்.கிராமத்து முரட்டுகாளை போல் சீறுகிறார்.

ரவீனா மீது காதல் பிறந்த பிறகு அவருடன் கண் சாடை பேச்சும், சீண்டலும்  சிணுங்களுமாக கிராமத்து வாசனையுடன் ரொமான்ஸ் செய்வது ரசிக்க வைக்கிறது. திடீரென்று நடக்கும் அந்த  திருப்பம் ஒருநிமிடம் அரங்கை  உறைய வைக்கிறது.

இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த  ஸ்கிரிப்ட்டை எப்படி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து  வழங்க முயற்சித்திருக் கிறார். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது பங்காளி சண்டை கதையாக இருந்தாலும் காதலும் தியாகமும் தான் ஓங்கி.  நிற்கிறது.

கிராமப்புறங்களில் நடக்கும் விஷயங்களை மிகத் தெளிவாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை