சற்று முன்



மூத்தகுடி திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான தருண் கோபி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மூத்தகுடி.

மற்றும் 70 ஸ் கனவுக்கன்னி ஆன கே ஆர் விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த கதையினை இயக்குனர் ரவி பார்கவன் இயக்கியுள்ளார்.

மூத்தகுடி என்கிற பகுதியில் அரசாங்கம் மதுபானக்கடை திறக்க கூடாது என்பதற்காக, ஒரு வயசானவருடன் இணைந்து ஊர் மக்களும் போராட்டம் செய்கின்றனர். அப்போது அங்குவரும் பத்திரிகையாளர் வயசானவரிடம் எதற்காக இந்த பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர் 1970 ல் மூக்கம்மாவின் குடும்பம் ஒரு விபத்தில் இறந்துவிட்டது அதற்கு காரணம் இந்த மதுபானம்தான், அப்போது இருந்து இந்த பகுதியில் இருக்கும் யாரும் குடிக்க கூடாது, மதுபானக்கடை திறக்கக்கூடாது என மூக்கம்மா ஊர் மக்களுடன் இணைந்து முடிவெடுக்கிறார்.

ஒருகட்டத்திற்கு மேல் ஊரில் உள்ள முக்கியமான நபர் ஒருவர் எப்படியாவது மூத்தகுடியில் இடம் வாங்கி ஒரு மதுபான தொழிற்சாலை அமைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். இந்த திட்டத்திற்கு மூக்கம்மாவின் பேரன் வீரய்யன் உதவி செய்கிறார். வீரய்யன் உதவி செய்ததனால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதும், கடைசியில் ஊர் மக்களின் போராட்டம் வென்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இயக்குனரும் நடிகர் ஆன தருண் கோபி சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

கே ஆர் விஜயா அவர்களின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இத்திரைப்படத்தின் மூலம் மதுவால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை