10 ஹவர்ஸ் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சிபி சத்யராஜ் நடிப்பில் 10 ஹவர்ஸ்.
இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
கதை ஆரம்பமே :
10 ஹவர்ஸ் – ஒரு விறுவிறுப்பான, சிந்திக்க வைக்கும் த்ரில்லர் !
இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள "10 ஹவர்ஸ்" ஒரு இரவையடிப்படையாகக் கொண்டு நகரும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. நேரம் ஓடும் வேகத்தில் பயணிக்கும் இந்த கதை, தொடக்கத்திலிருந்து கடைசி வரை பார்வையாளர்களை கட்டிப்பிடிக்கிறது.
ஜீவா கதாபாத்திரத்தில் ராஜ் ஐயப்பா ஸ்மார்டான, முடிவெடுப்பதில் துணிச்சலான இளைஞராக காட்சியளிக்கிறார். அவருடைய நடிப்பு கதையின் அச்சாணியாக நம்மை ஈர்க்கிறது. சாருமிஷா, தனக்கே உரிய அழகான நடிப்பால் கவனம் ஈர்க்க, ஆடுகளம் முருகதாஸ், ஜீவா ரவி, திலீபன் ஆகியோரும் தங்களுக்கான பாத்திரங்களில் அசத்துகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் படம் முழுக்க நேரங்களும் இடங்களும் மாறிக்கொண்டே செல்லும் காட்சிகளை அழகாகவும், அதேசமயம் டென்ஷனாகவும் காட்டுகிறார். ஒரு பஸ்ஸில் தொடங்கும் பயணம், போலீஸ் ஸ்டேஷன், இரவு நேர ஹைவே – அனைத்தும் கதையின் மையத்தில் நம்மை நீட்டித்துவைக்கிறது.
இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, பின்னணி இசையில் கதையின் உணர்வுகளை அழுத்தமாக கொண்டு வருகிறார். சில இடங்களில் மீண்டும் வரும் மெட்டுகள் கூட, மனதில் பதியும்படியாக அமைக்கப்பட்டுள்ளன.
நம்பர் பிளேட்டை வைத்து ஏற்படும் திருப்பங்கள், இரண்டு பஸ்ஸுகள், கதைக்குள் வரும் அரசியல், மக்கள் விழிப்புணர்வை தூண்டும் செய்தி என இயக்குநர் பல Social & Thriller elements-ஐ எளிமையாக ஒரு இரவுக்குள் கொண்டுவந்துள்ளார்.
மொத்தத்தில், "10 ஹவர்ஸ்" ஒரு engaging, meaningfull-ஆன cinematic அனுபவம். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும், அதேசமயம் கவரும் ஒரு நல்ல முயற்சி இது.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை