சற்று முன்



நாங்கள் திரை விமர்சனம் !




தமிழ் சினிமா உலகில் புது முகங்கள் புதிய முயற்சியாக நடித்திருக்கும் படம் நாங்கள் 

கதை ஆரம்பமே

ஒரு கணவன்–மனைவி, மூன்று ஆண் குழந்தைகள். ஈகோ பிரச்சனையால் தந்தை–தாய் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அதன் பின், மூன்று பிள்ளைகளும் ஒரு கண்டிப்பான தந்தையுடன் வளர்கிறார்கள்.

இந்த தந்தை தமிழ்ச் சினிமாவில் இதுவரை பார்க்காத விதமானவர். மகன்கள் முன்னிலையில் புகை பிடிக்கிறார், மது அருந்துகிறார், அடியாள்களை கொடுமைப்படுத்துகிறார் – இவையெல்லாம் அவரது வழக்கமான நடவடிக்கைகள்.

அம்மாவின் அன்பு இல்லாமல் வளர்கின்ற அந்த பிள்ளைகளின் நிலை என்னவாகிறது என்பதே கதைமுழுவதும் முக்கிய தளமாகிறது.


தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு:

இயக்குனர் அவினாஷ், ஆவணப்படம் மாதிரியான ஒரு கதையை சீரியல் போல மூன்று மணி நேரம் இழுத்து எடுத்திருக்கிறார்.

'நாங்கள்' படத்தை 'கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்' சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார்.

அவினாஷ் பிரகாஷ் இயக்கியதோடு, ஒளிப்பதிவும் அவரே செய்துள்ளார்.

இசை: வேத் ஷங்கர் சுகவனம் – இசை ஓகே ரகம்.

நடிப்பு:

அப்துல் ரபே – கண்டிப்பான தந்தையாக மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இவரைக் கண்டதும் நம்மையே அடிக்கணுமோ என்னும் அளவுக்கு காட்சிகளில் ரீயலிஸம்.

நாயகி பிரார்த்தனா – இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

மிதுன், ரித்திக், நிதின் – பிள்ளைகளாக அருமையான, உணர்ச்சி மிகுந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவு:

தந்தையின் கண்டிப்பான தருணங்களில் பிளாக் அண்ட் வெள்ளை ஷாட்கள்; மகிழ்ச்சியான தருணங்களில் கலர் ஷாட்கள் – இது ஒரு சிறப்பான கலைநயமான முயற்சி.

முடிவுரை:

தாய் இல்லாத பிள்ளைகள் எப்படி வளரும், கண்டிப்பான தந்தை ஒருவருடன் வாழும் பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் உணர்வுபூர்வமாகவும் சிக்கலாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சினிமா அல்ல, அனுபவமாக உணரும் வகையில் இருக்கும் படைப்பாகத் தெரிகிறது.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை