டூரிஸ்ட் ஃபேமிலி திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி .மற்றும் நடிகை சிம்ரன் , யோகி பாபு ,கமலேஷ் ,மிதுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
கதையின் ஆரம்பமே : இலங்கையில் இருந்து வாழ்க்கைக்கு வழியின்றி குடும்பத்துடன் ஓடி வந்த சசிகுமார்–சிம்ரன் குடும்பம், இந்தியாவில் புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கிறது. ஆனால் கடந்த காலத்தின் சாயலும், புதிய சந்தேகங்களும் அவர்களை விட்டு விலகுவதில்லை. அவர்கள் நிரபராதிகள் என நம்மால் நம்ப முடிகிறது, ஆனால் காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த நெருக்கடியில்தான் கதையும் அவர்களின் உணர்வுகளும் கட்டிக்கிழிக்கின்றன.
நடிப்பில் சிறப்பு:
- சசிகுமார்: பசுமை நிறைந்த மனிதனின் தோற்றத்தை சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்.
- சிம்ரன்: இந்த வேஷத்தில் அவரை பார்த்தது புதுசு. நகைச்சுவைக்கும், கனமான உணர்வுக்கும் சமமாக இடம் கொடுத்துள்ளார்.
- கமலேஷ் (சின்னவன்): இயல்பான குழந்தை நடிப்பில் காமெடியை ஆழமாக கொண்டு வந்திருக்கிறார்.
- மிதுன் (பெரியவன்): கோபத்திற்குப் பின்னால் இருக்கும் பரிதாபம் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
- யோகி பாபு: தனி காமெடி ட்ராக் இல்லாமலே, கதையின் ஓட்டத்தில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.
தொழில்நுட்ப தரம்:
- பேக்கிரவுண்ட் இசை – ஷான் ரோல்டன் உணர்வை தூண்டுகிறா வகையில் இசையமைத்துள்ளார்.
- ஒளிப்பதிவு – ராமேஸ்வரத்தையும், சென்னையின் சிறு குடியிருப்பு பகுதியையும் அழகாக காட்டியிருக்கிறார்.
- எடிட்டிங் – பக்கா பாக்கெட்! எந்த சலிப்பும் வரவில்ல.
பின்னணி கருத்து: அகதிகள், உண்மை அடையாளம் மறைவு, காவல்துறை சந்தேகம், குடும்ப பாசம் – இவை எல்லாம் நம்மை உணர்ச்சிப் பெருக்கில் இழுத்துச் செல்கின்றன.
முடிவில்லாத கதை என்றாலும், வாழ்க்கையோடு ஒத்துப்போகும் அமைப்பாகவே இருக்கிறது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை