கண்ணப்பா' - பக்தி, பிரமாண்டம், உணர்வு கலந்து சீராக பெரிதாக்கிய திருவிழா ! திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் பேன் இந்தியா படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் கண்ணப்பா .. மற்றும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் , மதுபாலா ,காஜல் அகர்வால் , மோகன் பாபு, மோகன்லால், சரத்குமார் , பிரபாஸ், அக்ஷய் குமார், சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முகேஷ் குமார் சிங்.
'கண்ணப்பா' - பக்தி, பிரமாண்டம், உணர்வு கலந்து சீராக பெரிதாக்கிய திருவிழா !
திரையரங்குக்கு திரும்பி வரவேண்டும் என்ற ஆர்வத்தையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் ஒரே நேரத்தில் உணர வைக்கும் படம் தான் 'கண்ணப்பா'. புது முயற்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை ஒன்றிணைக்கும் விதமாக, விஷ்ணு மஞ்சு கண்ணப்பராக அவதரித்திருக்கிறார்.
கதை:
வேடர் இனத்தில் பிறந்த திண்ணன், கடவுள் என்ற எண்ணமே இல்லாமல் வாழும் ஒருவன். ஆனால் வாழ்க்கையின் திருப்பங்கள், காதல், சோதனைகள் இவரை எப்படி பக்தி பாதையில் கொண்டு வந்தது? எளிய மனிதன் எப்படி உயர்ந்த பக்தராக ஆனார் என்பதை கதை ? இது காளகஸ்தியின் கண்ணப்பரின் வாழ்க்கை கதை !
விஷ்ணு மஞ்சுவின் மாஸ் & கிளாஸ்:
திண்ணனாக அவர் காட்டும் கடுமையான பார்வை, போர்வீரனாக உள்ள அம்பு வீச்சு, காதலராக மயக்கும் மென்மை, கண்ணப்பராக ஆன்மீக ரீதியாக உருகும் முகபாவனைகள் — அனைத்துமே ரசிகர்களின் நெஞ்சில் பதியும். இது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிவஐயா என்று விஷ்ணு மஞ்சு அழைக்கும் காட்சி திரையரங்குகளில் அதிர வைக்கும்.
சிவன் அடியர்கள் அதை உணர்வார்கள்.
ப்ரீத்தி முகுந்தன்:
பிரமாண்டமான திரைக்கதையில் நுட்பமான காதல் காட்சிகளில் ப்ரீத்தியின் அழகு மற்றும் நடிப்பு தனி முத்திரை பதிக்கிறது. பாரம்பரிய கதாபாத்திரம் போல காட்சிகளை உயிருடன் நிறைவு செய்கிறார்.
சிறப்பு கதாபாத்திரங்கள்:
மோகன் பாபு, மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் கதையின் முக்கியத்தை உயர்த்துகின்றன.
குறிப்பாக: பிரபாஸ் மற்றும் மோகன் பாபுவின் வசனங்கள் திரையரங்கில் கைதட்டலையும், சிந்தனையையும் ஏற்படுத்தும்.
மகாதேவர் மற்றும் பார்வதியின் கதாபாத்திரம் :
அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர் மிக அற்புதமான தேர்வு.
ஈசன் மற்றும் தேவியாக கலக்கியுள்ளனர் இருவரும்.
சரத்குமார் :
மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பு. அவர் இறுதியில் ஹர ஹர மஹாதேவா என்று கூறுவார் திரையரங்குகளில் goosebumps இருக்கும். அந்தக் காட்சி.
வசனங்கள் : திகைக்க வைக்கும் !
தொழில்நுட்பம்:
ஒளிப்பதிவு: நியூசிலாந்தின் இயற்கையை புதுப்படியாய் வெளிப்படுத்திய ஷெல்டன் சாவின் வேலை சிறப்பு. உண்மை மற்றும் VFX காட்சிகளை பிரித்தறிய முடியாத அளவுக்கு சிறந்த காட்சிப்படுத்தல்.
இசை: ஸ்டீபன் தேவஸீயின் இசை, பாடல்களில் அமைதியும், பிரமாண்டத்தையும் சேர்த்து தருகிறது. பின்னணி இசை பல இடங்களில் goosebumps தரும்.
சண்டை, கலை இயக்கம்: போர்க்களங்கள், காதல் காட்சிகள், ஆன்மீக தருணங்கள் அனைத்தும் சிறந்த அமைப்பில்.
திரைக்கதை, திரைப்பதிவு: ஆண்டனி செய்த தொகுப்பு படத்தையும் கதையையும் ஒரே ஓட்டத்தில் கொண்டு செல்கிறது.
இயக்குநரின் வித்தியாசம்:
முகேஷ் குமார் சிங் இந்தப் படத்தை சாதாரண புராணக்கதையாக சொல்லவில்லை. ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கையை புகுத்தவில்லை. நவீன பார்வையுடன் பக்தியின் உண்மையான அர்த்தத்தையும், சமூக விமர்சனத்தையும் நேர்த்தியாக இணைத்திருக்கிறார்.
முடிவில்:
'கண்ணப்பா' என்பது ஒரு படம் மட்டும் அல்ல — பக்தியின் ஆழம், வாழ்க்கையின் meaning, ஆன்மீகத்தின் நுட்பம், பிரமாண்டமான திரை அனுபவம் — இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு திருவிழா.
திரையரங்கில் இதனை கண்டிப்பாக பெரிய திரையில், குடும்பத்துடன் பாருங்கள். கண்களுக்கும் மனதுக்கும் உணர்வு மிகுந்த திருப்தி கிடைக்கும்.
சிவஐயா 🙏
ஹர ஹர மஹாதேவா
Rating: ⭐⭐⭐⭐⭐ (5/5)
ஓம் நமசிவாயா 🔥🤘








கருத்துகள் இல்லை