சற்று முன்



லவ் மேரேஜ் - ஒரு கலகலப்பான குடும்பக் காதல் படம். திரை விமர்சனம் ! Review



தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விக்ரம் பிரபு நடிப்பில் லவ் மேரேஜ் . மற்றும் நடிகை சுஷ்மிதா பட், சத்யராஜ், ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ் , அருள்தாஸ் ,கஜராஜ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சண்முகப்பிரியன் 


திரைப்பட கதை:

மதுரைச் சேர்ந்த 33 வயது விக்ரம் பிரபு, திருமணம் ஆகாமல் பாவப்பட்ட மனநிலையில் இருக்கிறார். பல பெண்கள் நிராகரிக்க, கோவை மாட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா பட் சம்மதிப்பதால், இருவருக்கும் நிச்சயம் நடக்கிறது. அதற்கிடையில் கொரோனா ஊரடங்கு வரும் சூழலில், விக்ரம் பிரபு குடும்பத்துடன் பெண் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால், சுஷ்மிதா அவரை அப்பாவியாக தவிர்க்க, ஒரு நாள் வீடு விட்டு போகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கதை ?

விக்ரம் பிரபு தனது நுட்பமான, அடக்கமான நடிப்பில் கவர்கிறார். சுஷ்மிதா பட் தனது கதாபாத்திரத்தை அழகாக ஏற்று நடித்திருக்கிறார். சத்யராஜ், ரமேஷ் திலக், கஜராஜ் உள்ளிட்ட பிற நடிகர்களின் பரிமாணமான நடிப்பு கூடுதல் பலமாக இருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையும், மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும் படத்திற்கு உயிரூட்டுகின்றன. இயக்குனர் சண்முக பிரியன், சாதாரண காதல் கதையை, குடும்பம், கலகலப்பு, உணர்வுகள் கலந்து ரசிக்கத்தக்க வகையில் இயக்கியிருக்கிறார்.

சில இடங்களில் சாமான்யமான நகர்வு இருந்தாலும், முழுவதும் குடும்பத்தோடு பார்ப்பதற்கேற்ற, நேர்த்தியான பொழுதுபோக்கு படம்.

லவ் மேரேஜ் ஒரு கலகலப்பான குடும்பக் காதல் படம். 

Rating : ⭐⭐⭐⭐☆ (4/5)


கருத்துகள் இல்லை