சற்று முன்



மாரீசன் திரை விமர்சனம் ! Review


தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் மாரீசன். மற்றும் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

திருடனான பகத் பாசிலும், வயதான வடிவேலும் ஒன்றாகச் செல்லும் பயணம் சுவாரஸ்யமான மர்மங்களுடன் நகர்கிறது. வடிவேலுவின் மறைக்கப்பட்ட அடையாளமும், அவரின் நடவடிக்கைகளும் படத்தின் கதை ?!

வடிவேலு தனது செண்டிமெண்ட் நடிப்பால், பகத் பாசில் தனது துறுதுறு நடிப்பால் படம் முழுவதையும் சுவாரஸ்யமாக்கியுள்ளனர். கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மர்மத் திருப்பங்களுக்கு உயிர் கொடுக்கிறது; சில பழைய இளையராஜா பாடல்கள் அழகாக பொருத்தப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் ஆழ்வாரின் எதார்த்தமான காட்சிப்படுத்தலும் இயற்கையான நிறங்களும் கதையை உயிரோட்டமாக்கியுள்ளன.

மொத்தத்தில், ‘மாரீசன்’ ஒரு சுவாரஸ்யமான, நல்ல இசை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு கொண்ட படம்.

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை