சற்று முன்



நறுவீ திரை விமர்சனம் ! Review


தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகரான ஹரிஷ் அலக் நடிப்பில் நறுவீ. மற்றும் வின்ஷோ , விஜே பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி , பிரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்....

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுபராக் முபாரக் .

கதை ஆரம்பமே

நீலகிரி மலைப்பகுதி பின்னணியில், மர்மமும் அமானுஷ்யமும் கலந்து செல்லும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை படம் தான் ‘நறுவீ’.

புதுமுகம் ஹரிஷ் அலக் நாயகனாக நம்பிக்கை தரும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஜே பப்பு – பாடினி குமார் ஜோடி இயல்பான நடிப்புடன் சிரிப்பையும் சேர்த்திருக்கிறார்கள். ஜீவா ரவி, பிரவீனா, கேதே உள்ளிட்ட பலர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அஸ்வத் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தரம் காட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன் காட்டின் அழகையும் ஆபத்தையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். எடிட்டர் சுபராக்.எம் இரண்டு கதைகளை இணைத்து சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.

இயக்குனர் சுபராக் முபாரக், அமானுஷ்யம், மர்மம், சஸ்பென்ஸ் ஆகியவற்றோடு சமூக செய்திகளையும் சேர்த்து சொல்ல முயன்றிருப்பது பாராட்டத்தக்கது. சில இடங்களில் கதை சொல்லல் தளர்ந்தாலும், கல்வியின் முக்கியத்துவம், பழங்குடியின மக்களின் பிரச்சனைகள், பெண்கள் சந்திக்கும் சவால்கள் போன்றவற்றை பிரச்சாரமில்லாமல் இயல்பாக இணைத்தது படத்தின் பலம்.

மொத்தத்தில், மர்மத்தையும் சமூகச் செய்தியையும் இணைக்கும் ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக ‘நறுவீ’ நினைவில் நிற்கும்.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை