வீரவணக்கம் திரைவிமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வீரவணக்கம் . மற்றும் பரத் , ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் .
கதை ஆரம்பமே :
கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும், புரட்சித் தலைவருமான பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறே இப்படத்தின் மையக்கரு. 1940 முதல் 1946 வரை நடந்த காலகட்டத்தில், விவசாயிகளின் துன்பங்கள், சாதி-பணக்கார வேறுபாடுகள், நில சுவாந்தர்களின் கொடுமைகள் ஆகியவற்றை எதிர்த்து கம்யூனிசம் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதை படம் உண்மையான வரலாற்று சுவையுடன் வெளிப்படுத்துகிறது.
நடிப்பு :
சமுத்திரக்கனி – பி. கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் மிக உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அவரது உரையாடல்கள் புரட்சியின் தீவிரத்தையும், மனிதாபிமானத்தையும் சித்தரிக்கின்றன.
பரத் – செல்வந்த கம்யூனிசவாதியாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் பகுதியில் மகளின் காதல் குறித்து அவர் கூறும் வசனங்கள், சமூகத்தில் நிலவும் ஆணவக்கொலை பிரச்சனைகளுக்கு நேரடியான பதிலாக அமைகின்றன.
ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, பி.கே. மேதினி உள்ளிட்டோர் தங்கள் வேடங்களில் சிறப்பாக பொருந்தியுள்ளனர்.
தொழில்நுட்பம் : ஒளிப்பதிவு (கவியரசு): பிரமாண்டம் குறைந்திருந்தாலும், உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வெற்றி.
இசை: எம்.கே. அர்ஜுனன், ஜி. ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிரோட்டம் தருகிறது.
இயக்கம்:
இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் – பி. கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை “பெரிய செலவுகளும் பிரமாண்ட மேக்கிங்கும் இல்லாமல், உணர்வுப்பூர்வமாக, வரலாற்று உண்மையை மீறாமல்” சித்தரித்துள்ளார். படத்தைப் பார்த்தால், ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவம் கிடைப்பது போல இருக்கும். முக்கியமாக, “போராட்டமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு” என்பதை வலிமையாக பதிவு செய்கிறார்.
முடிவுரை :
வீரவணக்கம் – பெரும் பிரமாண்ட காட்சிகள் இல்லாவிட்டாலும், வரலாற்றையும் புரட்சியையும் உண்மையாக சித்தரிக்கும் படம். சமுத்திரக்கனியின் தீவிர நடிப்பும், அனில் வி. நாகேந்திரனின் நேர்மையான இயக்கமும் இந்த படத்தின் பலம். சமூக நீதி, சாதி எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றின் இணைப்பை வலுவாக வெளிப்படுத்துகிறது.
Rating : 3 / 5

.jpeg)
.jpeg)






கருத்துகள் இல்லை