சற்று முன்



சொட்ட சொட்ட நனையுது திரை விமர்சனம் ! Review

தமிழ் சினிமா உலகில் நிஷாந்த் ரூஷோ நடிப்பில் சொட்ட சொட்ட நனையுது மற்றும் பிக் பாஸ் வர்ஷிணி , ஷாலினி , ரோபோ சங்கர் , புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நவீத் எஸ்.ஃபரீத் .

கதை ஆரம்பமே : 

இளம் வயதிலேயே தலையில் முடி உதிர்ந்து வழுக்கைத் தலையோடு இருக்கும் நாயகன் நிஷாந்த் ரூஷோவின் வாழ்க்கைச் சிக்கல்களையும், அதில் காதல் மற்றும் திருமணத்தில் வரும் பிரச்சனைகளையும் நகைச்சுவை கலந்த முறையில் சொல்லும் படம் தான் சொட்ட சொட்ட நனையுது.

நடிப்பு:

நிஷாந்த் ரூஷோ தனது கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார். குறிப்பாக வழுக்கைத் தலை மேக்கப் மிக நம்பகமாக அமைந்திருக்கிறது. நாயகிகளாக நடித்திருக்கும் பிக் பாஸ் வர்ஷிணி மற்றும் ஷாலினி இருவரும் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

நகைச்சுவை & கலைஞர்கள்:

ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் குழு போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சிரிப்பு காட்சிகள் சற்றே குறைவாகவே இருக்கிறது.

தொழில்நுட்பம்:

இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரயீஷ், காரைக்குடியை அழகாகவும், முக்கியமாக நாயகனின் “வழுக்கைத் தலையை” மையமாகவும் காட்டியிருக்கிறார்.

எடிட்டிங் சற்று மந்தமாக இருந்தாலும், இரண்டு மணி நேர படம் சுவாரஸ்யமாக முடிகிறது.

இயக்கம்:

இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத், வழுக்கைத் தலையால் ஏற்படும் வலியை சோகமாக அல்லாமல், ஜாலியாகக் காட்ட முயற்சித்திருக்கிறார். கதையிலும், முதல்பாதி – கிளைமாக்ஸ் காட்சியிலும் அவர் சொல்ல நினைத்தது ரசிகர்களை சென்றடைகிறது.

 மொத்தத்தில்:

சொட்ட சொட்ட நனையுது – வழுக்கைத் தலையோடு வாழும் இளம் தலைமுறையின் வலியை நகைச்சுவைத் துளிகளுடன் சொல்லும் வித்தியாசமான முயற்சி. நாயகனின் நடிப்பு, மேக்கப் மற்றும் தொழில்நுட்பம் படத்தை ரசிக்க வைக்கிறது.

Rating : 3 /


கருத்துகள் இல்லை