சற்று முன்



ஜாக்கி’ திரைவிமர்சனம் ! Review



மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் கிடா சண்டை போட்டிகளை மையமாகக் கொண்டு உருவான படம் தான் ‘ஜாக்கி’. ஆட்டோ ஓட்டுநரான யுவன் கிருஷ்ணாவுக்கும், வசதிபடைத்த ரிதன் கிருஷ்ணாவுக்கும் இடையே கிடா சண்டை மூலம் உருவாகும் பகை, அதே கிடா சண்டை போட்டியிலேயே முடிவுக்கு வருகிறதா? என்பதே படத்தின் மையக் கதை.

இயக்குநர் டாக்டர். பிரகாபல், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, கிடா சண்டை போட்டிகளை மிக எதார்த்தமாகவும் தத்ரூபமாகவும் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். மதுரை மண்ணின் வாசனையும், அந்த மக்களின் வாழ்க்கை முறையும் திரையில் உயிரோட்டமாக வெளிப்படுகிறது.

நாயகனாக நடித்துள்ள யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாகவும், அம்மு அபிராமியுடன் வரும் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

வில்லனாக நடித்துள்ள ரிதன் கிருஷ்ணா, கம்பீரமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புடன் படத்திற்கு தேவையான அனலை வழங்குகிறார்.

நாயகியாக அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு ஏற்ற அமைதியான நடிப்பை வழங்கியுள்ளார்.

மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் மதுரை மக்களாகவே வாழ்ந்து நடித்திருப்பது படத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறது.

என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு, கிடா சண்டை காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்கிறது.

சக்தி பாலாஜியின் பின்னணி இசை, போட்டி காட்சிகளில் பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

என்.பி. ஸ்ரீகாந்தின் எடிட்டிங், படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

திரைக்கதையில் ஆக்‌ஷன் அதிகமாக இருப்பதால் சில இடங்களில் சற்று தொய்வு உணரப்பட்டாலும், நடிகர்களின் வலுவான நடிப்பும், கிடா சண்டை போட்டிகளின் விறுவிறுப்பும் அந்த குறையை மறைத்து விடுகிறது.

மொத்தத்தில், ‘ஜாக்கி’ என்பது மதுரை மண்ணின் கலாச்சாரத்தையும், கிடா சண்டை மரபையும் உண்மைத்தன்மையுடன் சொல்லும் ஒரு வித்தியாசமான கிராமிய ஆக்‌ஷன் திரைப்படம்.

Rating : 3 /


கருத்துகள் இல்லை