2025ஆம் ஆண்டிற்கான CAIB விருதுகள் சென்னை யில் நடைபெற்றது !
2025ஆம் ஆண்டிற்கான CAIB விருதுகள் சென்னை யில் நடைபெற்றது !
*CAIB* (Cinema At It’s Best) Awards இன் ஒருங்கிணைப்பாளர் திரு. வினோத் ஜெயராமன் அவர்கள் CIETR (Chennai Institute of Educational Technology & Research) சார்பாக திரைத்துறை சார்ந்த வல்லுநர்களுக்கு 2018ம் ஆண்டிலிருந்து விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.
அவருடன் இணைந்து திரைப்பட ரசனையை உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தில் பல சினிமா ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கியதுதான் எங்கள் பரிந்துரை & நடுவர் குழு. தமிழில் வெளியிடப்படும் சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறோம். அவர்களின் நட்சத்திர மதிப்பை வைத்து அல்லாமல் படத்தில் வெளிப்படும் அவர்களது திறமையின் அடிப்படையிலேயே விருது வழங்கப் படுகிறது.
சரியான கலைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி மக்கள்மன்றத்தில் பாராட்டுவதன் மூலம் அந்தக் கலைஞர்கள் உற்சாகமடைந்து மேலும் சாதனை புரிவார்கள், தமிழ்ப் படங்களைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவார்கள் என்பதே எங்கள் நம்பிக்கை. “திறமான புலமையெனில் வெளிநாட்டான் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் வரிகளே எங்களது வழிகாட்டி.
வெற்றியாளர்களின் பட்டியல் கீழ்வருமாறு:
*CAIB விருதுகள் 2025*
1.) *சிறந்த விஷுவல் எபக்ட்ஸ்*
லோர்வன் ஸ்டுடியோஸ்
(ரெட்ரோ)
2.) *சிறந்த நடன இயக்குனர்*
ஷெரிப் எம்
"கனிமா" (ரெட்ரோ)
3.) *சிறந்த ஸ்டண்ட்*
கீச்சா காம்பாக்டீ -
(ரெட்ரோ)
4.) *சிறந்த ஆடை வடிவமைப்பு*
ஏகன் ஏகாம்பரம்
(பைசன் காளமாடன்)
5.) *சிறந்த ஒப்பனை*
பட்டணம் ரஷீத்
(காந்தா)
6.) *சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு*
ராமலிங்கம் தங்கவேல்
(காந்தா)
7.) *சிறந்த ஒலி வடிவமைப்பு*
சச்சின் சுதாகரன் & ஹரி ஹரன்
(நாங்கள்)
8.) *சிறந்த ரீ-ரிக்கார்டிங் மிக்சர்*
சுரேன் ஜி
(ரெட்ரோ)
9.) *சிறந்த எடிட்டிங்*
ராதா ஸ்ரீதர்
(பேட் கேர்ள்)
10.) *சிறந்த கலரிஸ்ட்*
சிவா சங்கர் வி
( பேட் கேர்ள்)
11.) *சிறந்த ஒளிப்பதிவு*
பிரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி &
இளவரசர் ஆண்டர்சன்
(பேட் கேர்ள்)
12.) *சிறந்த ஒரிஜினல் பாடல்*
மாரி செல்வராஜ்
"பாடலாசிரியர்"
(தீக்கொளுத்தி)
(பைசன் காளமாடன்)
13.) *சிறந்த ஒரிஜினல் பாடல் & ஆல்பம்*
நிவாஸ் கே பிரசன்னா
"பாடகர்" & "இசை இயக்குனர்"
(தீக்கொளுத்தி)
(பைசன் காளமாடன்)
14.) *சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்*
ஜேக்ஸ் பெஜாய்
(காந்தா)
15.) *சிறந்த துணை நடிகை*
ரோகிணி
(காதல் என்பது பொதுவுடைமை)
16.) *சிறந்த துணை நடிகர்*
ரமேஷ் திலக்
(டூரிஸ்ட் பேமிலி)
17.) *சிறந்த நடிகை*
கீதா கைலாசம்
(அங்கம்மாள்)
18.) *சிறந்த நடிகர்*
அப்துல் ரஃபே
(நாங்கள்)
19.) *சிறந்த கதை*
பெருமாள் முருகன்
(அங்கம்மாள்)
20.) *சிறந்த திரைக்கதை*
எஸ் யு அருண் குமார்
(வீர தீர சூரன் -2)
21.) *சிறந்த இயக்குனர்*
வர்ஷா பாரத்
(பேட் கேர்ள்)
22.) *வெண்புலி விருது*
அவினாஷ் பிரகாஷ்
(நாங்கள்)
23.) *சிறந்த திரைப்படம்*
அபிஷன் ஜீவிந்த்,
MRP எண்டெர்டைன்மென்ட் & மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்
(டூரிஸ்ட் பேமிலி).











கருத்துகள் இல்லை