தனிஷ்க் வழங்கும் ‘சோல்ஸ் இன் சிம்பொனி’
தனிஷ்க் வழங்கும் ‘சோல்ஸ் இன் சிம்பொனி’ (Souls in Symphony): பெண்களின் நட்புணர்வையும் நவீன கால தோழமையையும் கொண்டாடும் இயற்கை வைரங்களிலான புத்தம்புதிய நகைத் தொகுப்பு!
சூஜித் சர்கார் இயக்கத்தில் உருவான இந்தத் தொலைக்காட்சி விளம்பரமும் (TVC) புதிய நகைத்தொகுப்பும், இன்றைய பெண்களின் நவீன தோழமையையும், தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத தன்னம்பிக்கையையும் கொண்டாடுகின்றன.
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை பிராண்டான தனிஷ்க் (Tanishq), தனது புதிய இயற்கை வைர நகைத் ஹொகுப்பான ‘சோல்ஸ் இன் சிம்பொனி’ (Souls in Symphony)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 100% இயற்கையான வைரங்கள் மற்றும் நவரத்தினங்களைக் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள், பெண்களின் இன்றைய உறவுகள், அவர்களுக்கிடையே பொதுவாக இருக்கும் ஆத்மார்த்தமான அனுபவங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆழமான பிணைப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சோல்ஸ் இன் சிம்பொனி’, இன்றைய பெண்களின் நவீன தோழமைக்கும் அவர்களுக்கிடையேயான அரவணைப்புக்கும் ஒரு உ’ணர்வுப்பூர்வமான அடையாளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இயற்கை வைர நகைகள் மீது வாடிக்கையாளர்களுக்கும், நகை ப்ரியர்களுக்கும் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனிஷ்க் தனது நுணுக்கமான கைவினைத்திறன், நவீனத்துவத்தின் அழகியல் மற்றும் தனிஷ்க் இயற்கை வைரங்களின் மாறாத ஈர்ப்பு ஆகியவற்றின் மூலம் நகைப் பிரிவிற்கான சந்தையில் தனது முக்கியவத்துமிக்க இடத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நம்முடைய வாழ்வின் எதிர்கொள்ளும் அன்றாடத் தருணங்கள், மனதிற்கு நெருக்கமான சந்திப்புகள் மற்றும் சிறப்பான சுபநிகழ்ச்சிகள் என அனைத்து தருணங்களுக்கும் அணிந்து செல்லக்கூடிய நகைகளைத் தேடும் பெண்களுக்காகவே ‘சோல்ஸ் இன் சிம்பொனி’ பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தத் தருணங்களை அர்த்தமுள்ளதாக்கும் உறவுகளையும் மனதிற்கு நெருக்கமான பிணைப்புகளையும் இது போற்றுகிறது. பெண்களுக்கிடையேயான நவீன உறவுகளின் இதத்தையும் எளிமையையும் உத்வேகமாகக் கொண்டு, நேர்த்தியான வடிவங்கள் (silhouettes) மற்றும் பன்முகப் பயன்பாட்டுக்கேற்ற டிசைன்கள் மூலம் இந்த உணர்வுகளை நவீன நகைகளாக தனிஷ்க் மாற்றியுள்ளது. இதன் விளைவாக, இன்றைய நகையணியும் பாணிக்கு ஏற்றவாறு, பெண்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஒற்றுமை, தங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்ளும் தருணங்கள் மற்றும் ஆழமான பிணைப்புகளைக் கொண்டாடும் ஒரு அற்புதமான நகைத்தொகுப்பாக ’சோல்ஸ் இன் சிம்பொனி. உருவாகியுள்ளது.
18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நகைத்தொகுப்பு, பாரம்பரிய கலைத்திறனின் நயத்தை நவீன பாணியில் வெளிப்படுத்துகிறது. நேர்த்தியான வடிவமைப்புகள் அதை அணிபவர்களின் ஆளுமை வெளிப்படுத்தும் வகையில் அசைந்தாடும் அழகு கூடுதல் வசீகரத்தை அளிக்கிறது. கட்டிடக்கலை நுணுக்கங்கள் மற்றும் வண்ணங்களின் வசீகரமான விளையாட்டு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இதில் நுணுக்கமான ஓபன்வொர்க் பேட்டர்ன்கள் (openwork patterns), அருவி போன்ற மனம் கவரும் வடிவங்கள் (cascading forms), ஜியொமெட்ரிக் ஃப்ரேம்கள், (geometric framing) நேர்த்தியான லேட்டிஸ் நுணுக்கங்கள் (ornate lattice detailing), செதுக்கிய சிலைகளின் வடிவத்தைப் போன்ற வேலைப்பாடுகள் (sculptural silhouettes) மற்றும் மலர்கள் மற்றும் விசிறிகளால் ஈர்க்கப்பட்ட வடிவங்களைக் கொண்ட வேலைப்பாடுகள் (floral and fan-inspired motifs) போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் துல்லியமான வைரம் பதிக்கும் முறை, அடுக்கு அடுக்காக உலோகத்தை வடிவமைக்கும் கைவினைத்திறன் (layered metal craftsmanship) மற்றும் குஷன் (cushion), பியர் (pear), ஓவல் (oval), எமரால்டு (emerald) மற்றும் ரவுண்ட்-கட் (round-cut) ஆகிய இயற்கை நவரத்தினங்களின் சேர்க்கை மூலம் ஒவ்வொரு டிசைனுக்கும் ஒரு தனித்துவமான பரிமாணத்தையும் அசைவையும் தருகின்றன. வெள்ளை நிற தனிஷ்க் இயற்கை வைரங்கள், வண்ணமயமான இயற்கை நவரத்தினங்களுடன் இணைக்கப்பட்டு இருப்பதால், சோல்ஸ் இன் சிம்பொனி நகைத்தொகுப்பிற்கு நேர்த்தியையும், அழகிய வண்ண கலவையையும், கண்கவர் தோற்றத்தையும் அளிக்கின்றன.
இவ்விளம்பரப் பிரச்சாரத்தில் முதன்முறையாக அனன்யா பாண்டே, சுஷ்மிதா சென் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வெவ்வேறு ஆளுமைகளையும் பார்வைகளையும் கொண்ட இந்த மூன்று பெண்களும், பரஸ்பரம் பாராட்டுக்களை வெளிப்படுத்தும் அன்பு, ஒருவருக்கொருவர் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பண்பு மற்றும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி ஆகியவற்றில் வேரூன்றிய பிணைப்பின் நவீன வெளிப்பாடாகத் திகழ்கிறார்கள். புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சூஜித் சர்கார் இயக்கியுள்ள இந்த விளம்பரம், "பெண்கள் ஒருவரையொருவர் ஊக்குவித்து உயர்த்தும்போது, அவர்கள் ஒன்றிணைந்து இன்னும் பிரகாசமாக ஒளிர்வார்கள்" என்ற கருத்தைக் கொண்டாடும் வகையிலான நெருக்கமான மற்றும் எதார்த்தமான தருணங்களை அழகாகப் படம்பிடித்துள்ளது.
இந்த அறிமுகம் குறித்து தனிஷ்க் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திருமதி. பெல்கி ஷெரிங் (Ms. Pelki Tshering, Chief Marketing Officer, Tanishq) கூறுகையில், “தனிஷ்க் நிறுவனத்தில், ஒரு பெண்ணின் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும், அவளது பயணத்தை வடிவமைக்கும் உறவுகளையும் நாங்கள் எப்போதும் கொண்டாடி வருகிறோம். ‘சோல்ஸ் இன் சிம்பொனி’ மூலம், வழக்கமான விதிகளுக்குள் அடைப்படாமல், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர பாராட்டுகளால் வரையறுக்கப்படும் பெண்களின் நவீன தோழமையை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பினோம். இன்றைய பெண்கள் வயது, பின்னணி மற்றும் வாழ்க்கையின் கட்டங்களைக் கடந்து, அர்த்தமுள்ள பிணைப்புகளை உருவாக்கி வருகிறார்கள்; அங்கு ஒவ்வொருவரின் தனித்துவமும் கொண்டாடப்படுகிறது, ஒருவருடைய வெற்றி மற்றவரால் பெருமைப்படுத்தப்படுகிறது. அனன்யா, சுஷ்மிதா மற்றும் ராதிகா ஆகிய மூன்று பெண்களின் மூலம் இந்த மாறிவரும் தோழமை உணர்வு உயிர்பெற்றுள்ளது. இவர்கள் மூவரும் தங்களின் தனித்துவமான வழிகளில் உண்மைத்தன்மையையும் சுய வெளிப்பாட்டையும் பிரதிபலிக்கிறார்கள். பெண்கள் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் போது, அவர்கள் ஒன்றிணைந்து இன்னும் பிரகாசமாக ஒளிர்வார்கள் என்ற கருத்தை நாங்கள் மனதாரக் கொண்டாடுகிறோம்,” என்றார்.
தனிஷ்க் வழங்கும் இயற்கை வைரங்களிலான ‘சோல்ஸ் இன் சிம்பொனி’ நகைத்தொகுப்பு,இப்போது அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கிறது. இது பெண்கள் அன்றாடம் அணிவதற்கு ஏற்றதாக, அர்த்தமுள்ள தருணங்களுக்காக, சுபநிகழ்ச்சிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வைர நகைகளை வழங்குகிறது.








கருத்துகள் இல்லை