தமிழ் திருவிழா' என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது !
கலாச்சாரம், சமூகம் மற்றும் விளையாட்டைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் திருவிழா' என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது !
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் உள்ள 200 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையிலான கலாச்சார அனுபவங்கள் மூலம் நற்செயல்களில் ஈடுபடுத்த ஏற்பாடு
பிரிட்டானியா மில்க் பிகிஸ் ஸ்பான்சராக இருக்கும் இந்த முன்முயற்சிக்கு அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் குளுக்கோவிட்டா குளுக்கோஸ் லாலிபாப் ஆகியவை இணை ஸ்பான்சர்களாக உள்ளன
தமிழ் திருவிழாவின் ப்ரோமோவை இங்கே பாருங்கள்
COIMBATORE ஜூன் 24: தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம் மற்றும் உற்சாகமூட்டும் கலாச்சாரத்தை நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகத்தில் ஒரு சிறப்பு முன்முயற்சியாக ஸ்கூல் காண்டாக்ட் புரோகிராம் (SCP) என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ (POGO) சேனல் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை முழுவதும் உள்ள 200 பள்ளிகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளிடம் தமிழ் பாரம்பரியத்தை கவனிக்க வைப்பதோடு நிற்காமல், ஈடுபாட்டுடன் கூடிய ஒரு கொண்டாட்டமாக கொண்டு சேர்ப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
குழந்தை பருவ அனுபவங்கள் டிஜிட்டல் திரைகளை நோக்கி நகர்வது அதிகரித்து வரும் இன்றைய சூழலில், உள்ளூர் பழக்க வழக்கங்கள், சமூக விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த தனித்துவமான முன்முயற்சியின் மூலம், போகோ சேனல் அதன் அன்பான கதாபாத்திரங்களான சோட்டா பீம் மற்றும் லிட்டில் சிங்கம் ஆகியோருடன் ஒரு முழுமையான அனுபவங்களை உருவாக்கி கலாச்சார இடைவெளியைக் குறைக்க முயல்கிறது; குறிப்பாக போகோ உலகிற்கு புதிதாக வந்துள்ள சம்பத் ஷம்பத்-உடன் சேர்ந்து தமிழ் கலாச்சாரத்தை மகிழ்ச்சியான, புரிந்துகொள்ளக்கூடிய, மற்றும் மறக்க முடியாத வழியில் குழந்தைகளின் வாழ்க்கையுடன் இணைக்க போகோ இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த முமுன்யற்சி குறித்து பேசிய வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் தெற்காசியாவிற்கான ஹெட் ஆஃப் அட்வர்டைசிங் ரெவன்யூஸ் (விளம்பர வருவாய்த் தலைமை அலுவலர்), தனஸ் மேத்தா, அவர்கள் கூறுகையில், “போகோ-வில் நாங்கள் பங்கேற்பு மற்றும் பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் அர்த்தமுள்ள கல்வியை வழங்குவதாக நம்புகிறோம். தமிழ்நாடு ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ள மாநிலமாகும்; எனவே அதன் கலாச்சார அனுபவங்களை கொண்டாடுவதும், ஈர்க்கக்கூடிய வழிகளில் அதனை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமெனக் கருதுகிறோம். இந்த சிறப்பு ஸ்கூல் காண்டாக்ட் புரோகிராம் மூலம் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த POGO கதாபாத்திரங்களுடன் சேர்ந்து - விளையாட்டு, குழுவாக பணியாற்றுதல் மற்றும் கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளை பெறுவார்கள். இந்த முயற்சி எங்கள் பிராண்ட் பார்ட்னர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள POGO ரசிகர்கள், குடும்பங்கள் மற்றும் நுகர்வோருடன் ஒரு உண்மையான இணைப்பை உருவாக்க ஒரு குறிப்பிடத்தக்க தளத்தை வழங்கும். தமிழ் கலாச்சாரத்தின் இந்த தனித்துவமான கொண்டாட்டத்தை பள்ளிகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும், குறித்தும், குழந்தைகள் தங்கள் தொன்மையான பண்பாடு பற்றி பெருமைபட ஊக்குவிப்பதிலும் போகோ பங்காற்றுவது குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.”
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் தெற்காசிய மார்கெட்டிங் பிரிவின் ஹெட் (சந்தைப்படுத்தல் தலைமை அலுவலர்), ஜானவி வியாஸ், அவர்கள் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு பேசுகையில், “எங்களது முன்னெடுப்பான இந்த ‘தமிழ் திருவிழா’ மூலம், குழந்தைகள் வெறுமனே கவனிப்பதன் வழியாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தில் அவர்களை முழுமையாக பங்கேற்க வைப்பதன் மூலம் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். நாங்கள் அவர்களை டிஜிட்டல் திரைகளுக்கு அப்பால் அழைத்துச் செல்ல விரும்புகிறோம்; மேலும் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களுடன் மகிழ்ச்சியான வழியில் ஒரு மறக்க முடியாத அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்க விரும்புகிறோம். இதற்காக தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்தை மையமாக வைத்து விளையாட்டுகள், பந்தயங்கள், போட்டிகள், மற்றும் இன்டராக்டிவ் செயல்பாடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பல்வேறு பள்ளிகளில் உள்ள குழந்தைகளுடன் உரையாடவும், போகோ சேனலின் ரசிகர்களை உள்ளடக்கிய சமூகத்தை மேற்கொண்டு விரிவாக்கவும் நாங்கள் ஆவலுடன் தயாராகி வருகிறோம்,” என்று கூறினார்.
போகோ தமிழ் திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆக்டிவேஷன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக போகோவின் அன்பிற்குரிய நட்சத்திரங்களான சோட்டா பீம் மற்றும் லிட்டில் சிங்கம், ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் ஒரு கலாச்சார பயணத்தைத்தில் ஈடுபடவுள்ளனர்; பல்வேறு உற்சாகமூட்டும் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மாநிலத்தின் வண்ணங்கள், பாரம்பரியங்கள், விளையாட்டுகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களை தங்கள் மனதிற்குப் பிடித்த கதாபாத்திரங்களுடன் கொண்டாடி மகிழ குழந்தைகளை போகோ சேனல் அன்புடன் அழைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இன்டராக்டிவ் அனுபவங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; இதில் கிளாசிக் விளையாட்டான சைமன் சேஸ் (Simon Says)-ஐ தமிழ் பாணியில் லிட்டில் சிங்கம் சொல்லுறான் கேளு என்ற விளையாட்டு;பீம் சுட்கி ஆட்டம் பட்டம் டிரஸ்-அப் என்கிற வேடிக்கையான மாறுவேட ரிலே பந்தயம்; எந்த ஆசிரியரிடம் குறைந்த நேரத்தில் அதிக “ஃபில்ட்டர் காபி” கப்கள் உள்ளன என்பதைக் தீர்மானிக்கும் ‘ஃபில்ட்டர் காபி ரெடியா?’ வித் சம்பத் ஷம்பத் என்கிற வேகமான சிரிப்பு ரேஸ் விளையாட்டு; மற்றும் தமிழ் உணவு, திருவிழாக்கள், சினிமா மற்றும் பாரம்பரியங்கள் குறித்த குழந்தைகளின் அறிவை சோதிக்கும் பீமோட திருவிழா குவிஸ் என்கிற ஒரு வினாடிவினா போட்டி; என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை